மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வாகனங்கள் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட கலெக்டர் தகவல்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நடப்பு நிதியாண்டில் கால்களில் முழுமையாக வலுவில்லாத, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அதற்காக வடிவமைக்கப்பட்ட இணைப்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. இதனை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

கால்களில் முழுமையாக வலுஇல்லாத முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தினை அலுவலக வேலை நாட்களில் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பப் படிவத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ வருகிற 20-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடைய வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment