சதுரகிரியில் மழை: பக்தர்களுக்கு தடை

வத்திராயிருப்பு:மார்கழி அமாவாசையையொட்டி ஜன.10 முதல் 4 நாள் சதுரகிரி கோயில் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.நேற்று காலை 6:45 மணி முதல் பக்தர்கள் மலையேறினர்.

தொடர் மழையால் ஓடைகளில் நீர்வரத்து இருந்ததால் காலை 11:30 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தரிசனம் செய்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் உடனடியாக அடிவாரத்திற்கு திரும்பினர். வழக்கம்போல் கோயிலில் அமாவாசை வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜாபெரியசாமி, செயல்அலுவலர் விஸ்வநாதன் செய்து இருந்தனர்.

Related posts

Leave a Comment