சாத்தூர் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகம்

கழகத் தலைவர் மாண்புமிகு “தளபதியார்” மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தை திருநாளை முன்னிட்டு விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் அவர்கள் அறிவுறுத்தலின்படி,திராவிட முன்னேற்ற கழக கொடியை சாத்தூர் சட்டமன்ற தொகுதி திரு.கோசுகுண்டு S.V.சீனிவாசன் B.Com அவர்கள் சாத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதியில் கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.உடன் சாத்தூர் நகர செயலாளர் திரு எஸ் குருசாமி அவர்கள் ,வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.ஜெயப்பாண்டியன் அவர்கள் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் கிழக்கு ஒன்றிய பொருப்பாளர் திரு.M.A.P.சரவணமுருகன் அவர்கள்,தெற்கு ஒன்றிய பொருப்பாளர் திரு.ஜோ.ஞானராஜ் அவர்கள் மற்றும் நைனாபுரம் கிளை அ. இராசையா(Ex தென்கரை ஊராட்சி மன்ற தலைவர்)கழக நிர்வாகிகள்,கழக தொண்டர்கள்,பொதுமக்களும் கலந்து கொண்டனர். Happy_Pongal SatturDMK

Read More

நபருக்கு 55 லிட்டர் குடிநீர்

விருதுநகர்: பா.ஜ., மாவட்ட அரசு தொடர்பு தலைவர் ராஜகோபால் கலெக்டர் கண்ணனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய, மாநில அரசுகள், தன்னார்வ நிறுவனங்கள் பங்களிப்போடு பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டம் (ஜல் ஜீவன்) செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நபருக்கு 55 லிட்டர் வழங்கப்பட உள்ளது. இதன்படி கிராமங்களில் 50 சதவீத வீடுகளுக்கு தான் குடிநீர் விநியோகம் செய்ய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. குறைகளை நிவர்த்தி செய்து மக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.

Read More

தொடர் மழையில் முளை விட்ட பயிர் சோகத்தில் விவசாயிகள்

திருச்சுழி: தொடர் மழையால் அறுவடை செய்ய முடியாமல் பயிர்கள் முளை விட்ட நிலையில் பாழாகுவதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். திருச்சுழி அருகே எம். ரெட்டியபட்டி, பரளச்சி, கத்தாளம்பட்டி, மறவர் பெருங்குடி, முத்துராமலிங்கபுரம் உட்பட பல கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் மேற்பட்ட விவசாய நிலங்களில் சோளம், மக்காச்சோளம், கம்பு, திணை, உளுந்து, பாசி, மிளகாய், மல்லி போன்ற பயிர்களை விளைவித்திருந்தனர். நன்கு விளைந்து அறுவடை நேரத்தில் தொடர் மழையால் பயிர்கள் பாழாகி விட்டன. கதிர்களை அறுக்க முடியாமல் போனதால் திரட்சியான கதிர்களில் முளை விட துவங்கின. பயிர்கள் அழுகி போனால் ஒட்டு மொத்த விவசாயமும் பாதிப்பு அடைந்துள்ளது.

Read More

ரமண மகரிஷி.

திருச்சுழியில் அவதாரம் பூண்ட கருணை வடிவம், மதுரையில் ஞானம் பெற்ற மகான், திருவண்ணாமலையில் முக்தியடைந்த பரமாத்மா என ஜீவ ஒளி தத்துவமாக அருள்பாலித்து வருகிறார் ரமண மகரிஷி. அவரது அவதார தினமான டிச.,31ல் திருச்சுழி ‘சுந்தர மந்திரம்’ கோயிலில் ரமண மகரிஷி ஜெயந்தி விழா கோலாகலமாக நடக்கிறது. ரமண மகரிஷியின் வாழ்க்கை முழுவதுமே அதிசயங்களும், ஆச்சரியங்களும், அற்புதங்களும் நிறைந்தவை. அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் சுந்தரம் அய்யர் – அழகம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்த ரமணருக்கு பெற்றோர் வைத்த பெயர் வெங்கடராமன் அய்யர். சிறு வயதிலே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இவர் 12 வயதில் தந்தை மரணம் அடைந்தார். சித்தப்பா பொறுப்பில் வளர்ந்த ரமணர் 1891ல் மதுரை சென்றார். கல்வியில் நாட்டம் செல்லவில்லை. மீனாட்சி அம்மன் கோயிலில் அதிக நேரம் செலவிட்டார். நாயன்மார்கள் போல் நாமும் பக்தி செய்தால்…

Read More

Indian army day

ஸ்ரீவில்லிபுத்துார் தன்னலம் பார்க்காமல் நம் தாய்நாட்டையும் நம் மக்களையும் காக்கும் அரும்பணியில் 24 மணிநேரமும் எல்லையில் உறக்கமின்றி பணியாற்றுகின்றனர் நம் நாட்டின் ராணுவ வீரர்கள்.புயல், மழை, இயற்கை சீற்றம் மற்றும் தேசிய பேரிடர் காலங்களில் தங்களின் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றுகின்றனர். இத்தகைய அரும்பணியில் நாட்டின் சுதந்திர போராட்டம் முதல் இன்று வரை தாத்தா, மகன், பேரன் என தலைமுறை தலைமுறையாய் வீட்டிற்கு ஒருவரை ராணுவ பணிக்கு அனுப்பி வைக்கும் பெருமையை கொண்டுள்ளது பெருமாள்தேவன்பட்டி கிராமம்.ஆன்மிக பூமியான ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து 10 கி.மீ., தொலைவிலுள்ள இங்கு 500க்கு மேற்பட்ட வீடுகள், 1500க்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில் 780க்கு மேற்பட்டோர் முன்னாள் மற்றும் இன்னாள் ராணுவ வீரர்களாக உள்ளனர்.இங்கு வசித்தவர்களில் பலர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கீழ் ராணுவத்தில் பணியாற்றியதாக பெருமை கொள்கின்றனர் அக்கிராம மக்கள்.பல ஆண்டுகளுக்கு முன்பு…

Read More