தொடர் மழையில் முளை விட்ட பயிர் சோகத்தில் விவசாயிகள்

திருச்சுழி:

தொடர் மழையால் அறுவடை செய்ய முடியாமல் பயிர்கள் முளை விட்ட நிலையில் பாழாகுவதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.

திருச்சுழி அருகே எம். ரெட்டியபட்டி, பரளச்சி, கத்தாளம்பட்டி, மறவர் பெருங்குடி, முத்துராமலிங்கபுரம் உட்பட பல கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் மேற்பட்ட விவசாய நிலங்களில் சோளம், மக்காச்சோளம், கம்பு, திணை, உளுந்து, பாசி, மிளகாய், மல்லி போன்ற பயிர்களை விளைவித்திருந்தனர். நன்கு விளைந்து அறுவடை நேரத்தில் தொடர் மழையால் பயிர்கள் பாழாகி விட்டன. கதிர்களை அறுக்க முடியாமல் போனதால் திரட்சியான கதிர்களில் முளை விட துவங்கின. பயிர்கள் அழுகி போனால் ஒட்டு மொத்த விவசாயமும் பாதிப்பு அடைந்துள்ளது.

Related posts

Leave a Comment