ரமண மகரிஷி.

திருச்சுழியில் அவதாரம் பூண்ட கருணை வடிவம், மதுரையில் ஞானம் பெற்ற மகான், திருவண்ணாமலையில் முக்தியடைந்த பரமாத்மா என ஜீவ ஒளி தத்துவமாக அருள்பாலித்து வருகிறார் ரமண மகரிஷி.

அவரது அவதார தினமான டிச.,31ல் திருச்சுழி ‘சுந்தர மந்திரம்’ கோயிலில் ரமண மகரிஷி ஜெயந்தி விழா கோலாகலமாக நடக்கிறது.

ரமண மகரிஷியின் வாழ்க்கை முழுவதுமே அதிசயங்களும், ஆச்சரியங்களும், அற்புதங்களும் நிறைந்தவை. அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் சுந்தரம் அய்யர் – அழகம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்த ரமணருக்கு பெற்றோர் வைத்த பெயர் வெங்கடராமன் அய்யர். சிறு வயதிலே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இவர் 12 வயதில் தந்தை மரணம் அடைந்தார். சித்தப்பா பொறுப்பில் வளர்ந்த ரமணர் 1891ல் மதுரை சென்றார்.

கல்வியில் நாட்டம் செல்லவில்லை. மீனாட்சி அம்மன் கோயிலில் அதிக நேரம் செலவிட்டார். நாயன்மார்கள் போல் நாமும் பக்தி செய்தால் இறைவன் நம் முன் தோன்றி தான் ஆக வேண்டும் என்ற எண்ணம் ரமணர் மனதில் ஆழமாக வேரூன்றியது.

அவரின் உயர்ந்த எண்ணங்களால் 12 வயதில் ஞானம் பெற்று திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றார்.

குளத்தில் மூழ்கி எழுந்து கோவணம் மட்டுமே உடுத்தி யாரிடமும் தீட்சை பெறாமல் தன்னைத்தானே துறியாக ஆக்கி கொண்ட பரமாத்வானார். சதா இறைவனை துதித்தபடியே இருந்தார்.

பெரும்பாலான நேரங்களில் குகைக்குள் அமர்ந்து தியானம் செய்வதில் செலவிட்டார். ரமணர் புகழ் உலகளவில் பரவியது. அதிகம் பேசாமல் உலகை வென்றார்.திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் 1950 ஏப்.,14ல் முக்தியடைந்தார்.

ரமண மகரிஷியின் ஜெயந்தி விழா திருச்சுழி ரமணரின் சுந்தர மந்திரம்’ (சுந்தரம் என்பது தந்தை பெயர் – மந்திரம் என்பது கோயில்) கோயிலில் டிச.,31ல் கோலகலமாக நடந்து வருகிறது.

Related posts

Leave a Comment