விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஏழு மையங்களில் கொரோனா தொற்று தடுப்புக்கான கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று துவங்குகிறது.மாவட்டத்தில் முன்கள பணியாளர்கள், செவிலியர்கள், டாக்டர்கள் என 9720 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தும் முகாம் விருதுநகர், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை , திருச்சுழி எம்.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையம், சிவகாசி, ராஜபாளையம்அரசு மருத்துவமனைகள், எம்.புதுப்பட்டி, குன்னுார் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று துவக்கப்படுகிறது.விருதுநகர் அரசு மருத்துவமனையில் காலை 10:30 மணிக்கு கலெக்டர் கண்ணன் தலைமையில் முகாம் துவக்கப்படுகிறது.தினமும் தலா 100 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மதுரை மருந்து கோடவுனிலிருந்துகோவிஷீல்டு தடுப்பூசி பெட்டகம் விருதுநகர் மருந்து கோடவுனுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. கோடவுனுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.