மாண்பை பறைசாற்றும் பொங்கல்; பெருமிதம் கொள்ளும் பெண்கள்

தமிழர்கள் பல விழாக்களை கொண்டாடினாலும் தை முதல் நாளன்று கொண்டாடப்படும் பொங்கல் தான் பாரம்பரியம் மிக்கது. இது மாண்பை பறைசாற்றும் பண்பாட்டு விழாவாகும். நன்றி செலுத்துவது, உழைப்பை அங்கீகரிப்பது போன்ற பல உயரிய நோக்கங்களை கொண்டா விழா தான் பொங்கல் திருநாள். மார்கழி கடைசி நாளில் போகி கொண்டாடப்படுகிறது. வீட்டில் உள்ள பழைய பொருட்களை கழித்து வீட்டை புது பொலிவோடு மாற்றுவர். பிற்காலத்தில் இந்த விஷயம் மருவி பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி சுற்றுச்சூழலை மாசுப்படுத்துவதும் சேர்ந்து விட்டது. தை முதல் நாளில் அதிகாலையில் குளித்து சூரிய பகவானை வணங்கி வாசலில் கோலமிட்டு புதுப்பானை வைத்து புது அரிசியிட்டு பொங்க வைப்பர். தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றுவர். சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைக்கும் வழக்கமும் உண்டு. கரும்பு, மஞ்சள் கொத்து, காய்கறிகள், பழங்கள் வைத்து வீட்டில்…

Read More

இரண்டாவது நாளில் 153 பேருக்கு தடுப்பூசி

விருதுநகர் : விருதுநகரில் ஏழு மையங்களில் இரண்டாவது நாளாக 153 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. விருதுநகர், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைகள், திருச்சுழி எம்.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட ஏழு மையங்களில் நேற்று 27 பேர், சிவகாசி அரசு மருத்துவமனை, குன்னுார், எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள், எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், ராஜபாளையம் மகப்பேறு மருத்துவமனை ஆகிய மையங்களில் 126 பேர் என மொத்தம் 153 பேர் என இரண்டு நாள் முகாமில் மொத்தம் 333 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கன்னிச்சேரி புதுார், மல்லாங்கிணர், நரிக்குடி, சிவகாசி வட்டாரத்தில் தலா ஒரு தடுப்பூசி மையங்கள் துவங்கப்படவுள்ளது.

Read More

எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா…

சிவகாசி : சிவகாசியில் எம்.ஜி.ஆர்., 104 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அவரின் உருவ படங்களுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். சிவகாசி காரனேசன் காலனியில் கொடியேற்றினார். நகர செயலாளர்கள் பொன்சக்திவேல், அசன்பதூரூதீன், ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், தெய்வம், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சுபாஷினி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், நிர்வாகிகள் கதிரவன், விஜய் ஆனந்த் பங்கேற்றனர். அருப்புக்கோட்டை: அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் யோகவாசுதேவன், வடக்கு ஒன்றிய செயலர் சங்கரலிங்கம், அவை தலைவர் அசோக் வேல்சாமி, முன்னாள் ஒன்றிய செயலர் கொப்பையா ராஜ், நிர்வாகிகள் மோகன்வேல் பங்கேற்றனர். காரியாபட்டி: ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்திராஜ், முருகன், நகர செயலாளர் விஜயன் பங்கேற்றனர். நரிக்குடி வீரசோழனில் ஒன்றிய துணை தலைவர்…

Read More

வெம்பக்கோட்டை, பிளவக்கல் அணைகளில் நீர் மட்டம் உயர்வு

ஸ்ரீவில்லிபுத்துார் ” ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் வைப்பாற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. பிளவக்கல், வெம்பக்கோட்டை அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கைகொடுக்காததால் விவசாயப் பணிகள் தடைபட்டன. எனினும் வடகிழக்கு பருவமழை அக்.,17 ல் துவங்கி தொடர்ந்து பெய்து வந்ததால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு ஜனவரி இரண்டாவது வாரம் வரை தொடர்ந்து பெய்ததால் வத்திராயிருப்பு அருகே 47 அடி நீர் மட்டம் கொண்ட பிளவக்கல் அணை 33 அடியை எட்டியது. சாத்துார்: 24 அடி நீர் மட்டம் கொண்ட வெம்பக்கோட்டை அணையில் ஜனவரி துவக்கத்தில் 10 அடி மட்டுமே இருந்தது. தொடர் மழையால் நீர் மட்டம் 4 அடி உயர்ந்து 14 அடியானது.…

Read More

மருத்துவ கல்லூரி கட்டுமானம் துரிதம்; தேர்தல் அறிவிப்புக்குமுன் திறக்க ஏற்பாடு

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரி கட்டுமானப்பணிதுரிதமாக நடத்தும்படி பொதுப்பணித்துறைக்கு கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரசு மருத்துவ கல்லுாரி திறப்பு விழா, பல் மருத்துவ கல்லுாரி அடிக்கல் நாட்டு விழா என இரண்டு விழாக்களையும் பிப்.,12ல் நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 22.44 ஏக்கரில் ரூ. 120 கோடி மதிப்பில் அமைய உள்ளஅரசு மருத்துவ கல்லுாரி, நிர்வாக அலுவலகம், டீன் குடியிருப்பு, மாணவர் விடுதி மற்றும் ரூ.57 கோடி மதிப்பில் தலைமை அலுவலகம் கட்டுமானப்பணிகளை பொதுப்பணித்துறை (மருத்துவம்) துரிதமாக மேற்கொள்கிறது. 2021 மார்ச் 31க்குள் திறப்பு விழா காண முடிவு செய்யப்பட்ட நிலையில் மார்ச் இரண்டாவது, மூன்றாவது வாரத்திற்குள் சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. அதற்குள் மருத்துவ கல்லுாரியை திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்துகட்டுமானப்பணியை கலெக்டர் கண்ணன்…

Read More

நாரணாபுரத்தில் கால்நடை மருந்தகம்; அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கினார்

சிவகாசி : நாரணாபுரத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் புதிய கால்நடை மருந்தகத்தை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார். கால்நடை மருந்தக திறப்பு விழா ,விலையில்லா கறவைப்பசுக்கள், வெள்ளாடுகள் மற்றும் கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிகளவில் கால்நடைகளை வளர்க்க அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றன. அதன்படி தற்போது கிராமப்பகுதி வறுமையில் வாடுபவர்களை கண்டறிந்து விலையில்லா கறவைமாடுகள், வெள்ளாடுகள் மற்றும் அசில் இன கோழிகுஞ்சுகள் வழங்கப்படுகின்றன , என்றார் . இதன் பின்ஆர். ரெட்டியாபட்டி , செங்கமலநாச்சியார்புரம் ,சாமிநத்தம், பள்ளப்பட்டி,நாரணாபுரம் ஊராட்சியில் 391 பயனாளிகளுக்கு ரூ.58.85 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து செங்கமலநாச்சியார்புரம், சாமிநத்தம் ஊராட்சிகளில் கால்நடை மருந்தகங்களை அமைச்சர் திறந்து வைத்தார். தொழிலதிபர் பிரம்மன், ஊராட்சி தலைவர் தேவராஜன், மாவட்ட மருத்துவரணி விஜய்ஆனந்த்,…

Read More

ஓட்டுக்காக ராகுல் வரவில்லை: எம்.பி., பேட்டி

விருதுநகர் : விருதுநகரில் எம்.பி.,மாணிக்கம் தாகூர் கூறியதாவது: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழு அழைப்பின் பேரில் தான் ராகுல் கலந்து கொண்டார். ஓட்டுக்காக வரவில்லை. அமைச்சர் உதயகுமாருக்கு தமிழர், விவசாயிகள் குறித்து தெரியாது. காமெடி நடிகர் வடிவேல் இடத்தை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பிடித்துள்ளார். முதல்வர் பழனிச்சாமி பணத்தை நம்பியே தேர்தலை சந்திக்கிறார்.மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். நெல், மக்காச்சோளம் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். சிவகாசியில் ரயில்வே மேம்பால பணி அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Read More