இரண்டாவது நாளில் 153 பேருக்கு தடுப்பூசி

விருதுநகர் : விருதுநகரில் ஏழு மையங்களில் இரண்டாவது நாளாக 153 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.

விருதுநகர், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைகள், திருச்சுழி எம்.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட ஏழு மையங்களில் நேற்று 27 பேர், சிவகாசி அரசு மருத்துவமனை, குன்னுார், எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள், எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், ராஜபாளையம் மகப்பேறு மருத்துவமனை ஆகிய மையங்களில் 126 பேர் என மொத்தம் 153 பேர் என இரண்டு நாள் முகாமில் மொத்தம் 333 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கன்னிச்சேரி புதுார், மல்லாங்கிணர், நரிக்குடி, சிவகாசி வட்டாரத்தில் தலா ஒரு தடுப்பூசி மையங்கள் துவங்கப்படவுள்ளது.

Related posts

Leave a Comment