எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா…

சிவகாசி : சிவகாசியில் எம்.ஜி.ஆர்., 104 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அவரின் உருவ படங்களுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். சிவகாசி காரனேசன் காலனியில் கொடியேற்றினார்.

நகர செயலாளர்கள் பொன்சக்திவேல், அசன்பதூரூதீன், ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், தெய்வம், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சுபாஷினி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், நிர்வாகிகள் கதிரவன், விஜய் ஆனந்த் பங்கேற்றனர்.

அருப்புக்கோட்டை: அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் யோகவாசுதேவன், வடக்கு ஒன்றிய செயலர் சங்கரலிங்கம், அவை தலைவர் அசோக் வேல்சாமி, முன்னாள் ஒன்றிய செயலர் கொப்பையா ராஜ், நிர்வாகிகள் மோகன்வேல் பங்கேற்றனர்.

காரியாபட்டி: ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்திராஜ், முருகன், நகர செயலாளர் விஜயன் பங்கேற்றனர். நரிக்குடி வீரசோழனில் ஒன்றிய துணை தலைவர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட அவை தலைவர் ஜெயபெருமாள், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பிரபாத்வர்மன் முன்னிலை வகித்து இனிப்பு வழங்கினர்.

விருதுநகர்: கருமாதி மடத்தில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மேற்கு மாவட்ட அவை தலைவர் விஜயகுமரன் தலைமையில் எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் கோகுலம் தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர செயலாளர் நைனார் முகமது, ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், ராஜசேகரன், ஒன்றிய தலைவர் சுமதி பங்கேற்றறனர். ஏ.டி.பி., காம்பவுண்ட், கன்னிசேரி, அய்யனார் நகரில் அசைவ விருந்து வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்துார்: எம்.எல்.ஏ., சந்திரபிரபா தலைமையில் ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிந்து இனிப்பு வழங்கினர். நிலவள வங்கி தலைவர் முத்தையா, இளைஞர் பாசறை மாவட்ட செயலர் முத்துராஜ், ஒன்றியக்குழு தலைவர் சிந்துமுருகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் வசந்திமான்ராஜ்,ஒன்றிய செயலர் மயில்சாமி, நகர செயலர் பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர்.

* வைத்தியலிங்கபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் தலைமையில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.ராஜபாளையம்: பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றது. நகர செயலாளர் பாஸ்கரன், பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் வனராஜ், நிர்வாகிகள் கிருஷ்ணராஜ், வழக்கறிஞர் முருகேசன், ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment