நாரணாபுரத்தில் கால்நடை மருந்தகம்; அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கினார்

சிவகாசி : நாரணாபுரத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் புதிய கால்நடை மருந்தகத்தை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார்.

கால்நடை மருந்தக திறப்பு விழா ,விலையில்லா கறவைப்பசுக்கள், வெள்ளாடுகள் மற்றும் கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிகளவில் கால்நடைகளை வளர்க்க அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றன. அதன்படி தற்போது கிராமப்பகுதி வறுமையில் வாடுபவர்களை கண்டறிந்து விலையில்லா கறவைமாடுகள், வெள்ளாடுகள் மற்றும் அசில் இன கோழிகுஞ்சுகள் வழங்கப்படுகின்றன , என்றார் .

இதன் பின்ஆர். ரெட்டியாபட்டி , செங்கமலநாச்சியார்புரம் ,சாமிநத்தம், பள்ளப்பட்டி,நாரணாபுரம் ஊராட்சியில் 391 பயனாளிகளுக்கு ரூ.58.85 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து செங்கமலநாச்சியார்புரம், சாமிநத்தம் ஊராட்சிகளில் கால்நடை மருந்தகங்களை அமைச்சர் திறந்து வைத்தார். தொழிலதிபர் பிரம்மன், ஊராட்சி தலைவர் தேவராஜன், மாவட்ட மருத்துவரணி விஜய்ஆனந்த், ஒன்றிய கவுன்சிலர் ஆழ்வார் ராமானுஜம் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment