மருத்துவ கல்லூரி கட்டுமானம் துரிதம்; தேர்தல் அறிவிப்புக்குமுன் திறக்க ஏற்பாடு

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரி கட்டுமானப்பணிதுரிதமாக நடத்தும்படி பொதுப்பணித்துறைக்கு கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரசு மருத்துவ கல்லுாரி திறப்பு விழா, பல் மருத்துவ கல்லுாரி அடிக்கல் நாட்டு விழா என இரண்டு விழாக்களையும் பிப்.,12ல் நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது.

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 22.44 ஏக்கரில் ரூ. 120 கோடி மதிப்பில் அமைய உள்ளஅரசு மருத்துவ கல்லுாரி, நிர்வாக அலுவலகம், டீன் குடியிருப்பு, மாணவர் விடுதி மற்றும் ரூ.57 கோடி மதிப்பில் தலைமை அலுவலகம் கட்டுமானப்பணிகளை பொதுப்பணித்துறை (மருத்துவம்) துரிதமாக மேற்கொள்கிறது. 2021 மார்ச் 31க்குள் திறப்பு விழா காண முடிவு செய்யப்பட்ட நிலையில் மார்ச் இரண்டாவது, மூன்றாவது வாரத்திற்குள் சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. அதற்குள் மருத்துவ கல்லுாரியை திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையடுத்துகட்டுமானப்பணியை கலெக்டர் கண்ணன் ஆய்வு செய்தார்.தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கட்டுமானத்தை முடிக்கஒப்பந்ததாரரை கலெக்டர் கேட்டு கொண்டார்.இதன்படி வகுப்பறைகளுக்கான தரைத்தளம் உட்பட ஆறு மாடி கட்டடத்தின் தரைத்தளம், முதல், இரண்டாவது தளங்கள், டீன் குடியிருப்பு மற்றும் அலுவலகம், நிர்வாக அலுவலகம், மாணவர் விடுதி கட்டடங்களின் கட்டுமானப்பணிகளை பிப்.,10க்குள் முடிக்கவும், பிப்.,12ல் மருத்துவ கல்லுாரி திறப்பு விழா, அரசு பல் மருத்துவ கல்லுாரிக்கான அடிக்கல் நாட்டு விழா என இரண்டு விழாக்களையும் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதை தொடர்ந்து 2021- – 22 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்க வாய்ப்பு உள்ளது.

Related posts

Leave a Comment