வெம்பக்கோட்டை, பிளவக்கல் அணைகளில் நீர் மட்டம் உயர்வு

ஸ்ரீவில்லிபுத்துார் ” ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் வைப்பாற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

பிளவக்கல், வெம்பக்கோட்டை அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கைகொடுக்காததால் விவசாயப் பணிகள் தடைபட்டன. எனினும் வடகிழக்கு பருவமழை அக்.,17 ல் துவங்கி தொடர்ந்து பெய்து வந்ததால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு ஜனவரி இரண்டாவது வாரம் வரை தொடர்ந்து பெய்ததால் வத்திராயிருப்பு அருகே 47 அடி நீர் மட்டம் கொண்ட பிளவக்கல் அணை 33 அடியை எட்டியது.

சாத்துார்: 24 அடி நீர் மட்டம் கொண்ட வெம்பக்கோட்டை அணையில் ஜனவரி துவக்கத்தில் 10 அடி மட்டுமே இருந்தது. தொடர் மழையால் நீர் மட்டம் 4 அடி உயர்ந்து 14 அடியானது. ஆறு ஆண்டுகளுக்கு பின் அணை நீர் மட்டம் 14 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. 33 அடி நீர் மட்டம் கொண்ட ராஜபாளையம் சாஸ்தா கோயில் அணை முழு கொள்ளளவை எட்டியது. 18 அடி நீர் மட்டம் கொண்ட குல்லுார்சந்தை அணை 17 அடியாக உயர்ந்து முறு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. நீர் நிலைகள் நிரம்பி வருவது விவசாயிகளை மகழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

Related posts

Leave a Comment