நான்கு வழிச்சாலையில் விபத்து பகுதிகள் ஆய்வு

விருதுநகர் : விருதுநகரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு நான்கு வழிச்சாலையின் விபத்து பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஜன.18 முதல் பிப்.17 வரை சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இளங்கோ, மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர் பூரணலதா, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துணை திட்ட மேலாளர் சிவபெருமாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் விபத்து பகுதிகளை ஆய்வு செய்தனர். கலெக்டர் அலுவலக சந்திப்புகளில் நடை பாதையில் எச்சரிக்கை கோடுகள் வரையவும், சென்டர் மீடியன்களை 3 அடிக்கு உயர்த்தவும், கணபதிமில் சந்திப்பில் சர்வீஸ் ரோடு, ஹைமாஸ் விளக்குகள், வடமலைக்குறிச்சிஆற்று பாலத்தின் இருபுறமும் கூடுதல் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

Read More

கோயில் திருப்பணிகள்: அமைச்சர் நன்கொடை

சிவகாசி : கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார். திருத்தங்கல் கருப்பசாமி கோயில் கோபுர பணிக்கு ரூ. 5 லட்சம், விருதுநகர் அருணாசல ஈஸ்வரர் கோயில் ரூ.1 லட்சம், ராஜபாளையம் விஸ்வகர்மா சமுதாய திருமண மண்டப கட்டுமான பணிக்கு ரூ. 3 லட்சம், ஸ்ரீவில்லிபுத்துார் அத்திகுளம் இந்து நாடார் உறவினர்முறை பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோயில், சுந்தரபாண்டியன் கிராமம் சாலியர் சமுதாய குஞ்சுமாடசாமி, பத்ரகாளியம்மன் கோவில், சாத்துார் முத்தாண்டிபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு ரூ.75 ஆயிரம் என ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் நன்கொடையை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார். நகர செயலாளர் பொன்சகத்திவேல், ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி பங்கேற்றனர்.

Read More

போலீசாருக்கு ரத்த பரிசோதனை

சிவகாசி : சிவகாசி ஆயுதப்படை மைதானத்தில் தைரோகேர் ரத்த பரிசோதனை நிலையம் சார்பில் போலீசாருக்கு ரத்த பரிசோதனை நடந்தது. ஏற்பாடுகளை பொறுப்பாளர் மணி, டி.எஸ்.பி., பிரபாகரன் செய்தனர்.

Read More

பள்ளி வகுப்பறையே எங்கள் சொர்க்கம்

பட்டாம்பூச்சியாக பறக்க வேண்டிய மாணவர்கள் உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்றால் பள்ளிக்கு செல்லாமல் ஊரடங்கு பெயரில் 10 மாதங்களுக்கும் மேல் வீட்டில் முடங்கினர். பெயரளவில் ஆன்லைன் வகுப்புகள், சந்தேகம் எழுந்தால் கேள்வி கேட்க முடியாத நிலையில் வாட்ஸ் ஆப், வீடியோ என ஆசிரியர்கள் முகம் காணாமல் கல்வி கற்றனர். ஒரு வழியாக 10, பிளஸ் 2 வகுப்புகள் நேற்று திறக்கப்பட்டதும் மடை திறந்த வெள்ளம் போல் பள்ளியை நோக்கி மாணவர்கள் உற்சாகத்துடன் சென்றனர். விருதுநகரில் 388 பள்ளிகள் திறக்கப்பட்டன. பெரும்பாலான பள்ளிகளில் 90 சதவீதம் மாணவர் வருகை இருந்தது. கொரோனா தாக்கத்தில் மீண்டு(ம்) வந்த மாணவர், ஆசிரியர்கள் முதல் நாள் அனுபவம் குறித்து…

Read More

மக்கள் கிராம சபைக் கூட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி விஸ்வநத்தம் கிராமத்தில்

கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக 20.01.2021 இன்று ”மக்கள் கிராம சபைக் கூட்டம்” சிவகாசி சட்டமன்ற தொகுதி விஸ்வநத்தம் கிராமத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் திருமிகு.K.K.S.S.R.இராமச்சந்திரன் MLA, அவர்கள்,திருமிகு.தங்கம் தென்னரசு MLA, அவர்கள் தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ் குமார் M.P அவர்கள் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.சீனிவாசன் MLA அவர்கள், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தங்க பாண்டியன் அவர்கள், உடன் சட்டமன்ற தொகுதி திரு.கோசுகுண்டு S.V.சீனிவாசன் B.Com அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்,கழக தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்…

Read More