கோயில் திருப்பணிகள்: அமைச்சர் நன்கொடை

சிவகாசி : கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார்.

திருத்தங்கல் கருப்பசாமி கோயில் கோபுர பணிக்கு ரூ. 5 லட்சம், விருதுநகர் அருணாசல ஈஸ்வரர் கோயில் ரூ.1 லட்சம், ராஜபாளையம் விஸ்வகர்மா சமுதாய திருமண மண்டப கட்டுமான பணிக்கு ரூ. 3 லட்சம், ஸ்ரீவில்லிபுத்துார் அத்திகுளம் இந்து நாடார் உறவினர்முறை பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோயில், சுந்தரபாண்டியன் கிராமம் சாலியர் சமுதாய குஞ்சுமாடசாமி, பத்ரகாளியம்மன் கோவில், சாத்துார் முத்தாண்டிபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு ரூ.75 ஆயிரம் என ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் நன்கொடையை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார். நகர செயலாளர் பொன்சகத்திவேல், ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment