நான்கு வழிச்சாலையில் விபத்து பகுதிகள் ஆய்வு

விருதுநகர் : விருதுநகரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு நான்கு வழிச்சாலையின் விபத்து பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஜன.18 முதல் பிப்.17 வரை சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இளங்கோ, மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர் பூரணலதா, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துணை திட்ட மேலாளர் சிவபெருமாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் விபத்து பகுதிகளை ஆய்வு செய்தனர். கலெக்டர் அலுவலக சந்திப்புகளில் நடை பாதையில் எச்சரிக்கை கோடுகள் வரையவும், சென்டர் மீடியன்களை 3 அடிக்கு உயர்த்தவும், கணபதிமில் சந்திப்பில் சர்வீஸ் ரோடு, ஹைமாஸ் விளக்குகள், வடமலைக்குறிச்சிஆற்று பாலத்தின் இருபுறமும் கூடுதல் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

Related posts

Leave a Comment