மாநில அளவிலான அத்லெட்டிக் சாம்பியன்சிப் 2021 போட்டி

சிவகாசி : விருதுநகர் மாவட்ட அத்லெட்டிக் சங்கம் சார்பில் மாநில அளவிலான அத்லெட்டிக் சாம்பியன்சிப் 2021 போட்டிகள் சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லுாரியில் இன்று துவங்குகிறது.மூன்று நாட்கள் நடக்கும் இப்போட்டிகளில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து 3000க்கு மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு அத்லெட்டிக் சங்கம் தலைவர் தேவாரம் ஐ.பி.எஸ்., இணை செயலாளர் லதா, விருதுநகர் கலெக்டர் கண்ணன், எஸ்.பி., பெருமாள் துவக்கி வைக்கின்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் தேசிய போட்டி , ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பர். சங்க மாவட்ட தலைவர் குவைத்ராஜா, அசோகன், சிவராஜ் ஏற்பாடுகளை செய்கின்றனர்.

No photo description available.


Related posts

Leave a Comment