விருதுநகர் : சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விருதுநகரில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.மத்திய, மாநில அரசுகளின் ஆணை படி ஜன. 18 முதல் பிப். 17 வரை சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது. இதன் முதல் நிகழ்ச்சியாக விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து துறை, அரசு போக்குவரத்து கழகம் இணைந்து பெண்கள் பங்கேற்கும் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் கண்ணன் துவங்கி வைத்தார். எஸ்.பி.,பெருமாள் முன்னிலை வகித்தார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி வாகனமும் ஊர்வலத்தில் பங்கேற்றது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் துவங்கி எம்.ஜி.ஆர்., சிலையில் முடிந்தது. துணை போக்குவரத்து ஆணையர் இளங்கோவன், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் சிவலிங்கம், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இளங்கோ, மூக்கன், முருகன், போக்குவரத்து கழக துணை மேலாளர் மாரிமுத்து பங்கேற்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார் : சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிவது விழிப்புணர்வு ஊர்வலம் கிருஷ்ணன் கோவில் வி. பி.எம்.எம். கல்லூரியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்துார் வரை நடந்தது. டி.எஸ்.பி நமச்சிவாயம், கல்லுாரி சேர்மன் சங்கர் துவக்கி வைத்தனர். மாணவிகள் மற்றும் போலீசார் ஹெல்மெட் அணிந்து டூவீலர்களில் ஊர்வலமாக சென்றனர். ஏற்பாடுகளை ஸ்ரீ வில்லிபுத்துார் போலீசார் செய்திருந்தனர்.சிவகாசி : டி.எஸ்.பி, பிரபாகரன் துவக்கி வைத்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் முன்னிலை வகித்தார். போலீசார், போக்குவரத்து அலுவலர்கள், பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து ஊர்வலமாக சென்றனர். இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலபதி, முத்துக்குமார், ரமாராணி, ஜான்சி , டிராபிக் இன்ஸ்பெக்டர் சுடலை மணி, மோட்டார் ஆய்வாளர் பூர்ணலதா கலந்து கொண்டனர்.சாத்துார்: முக்கு ராந்தலில் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்ட ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மேட்டமலை பி.எஸ்.என்.எல்.(பி.எட்.) கல்லூரி தலைவர் ராஜூ பேசினார். இன்ஸ்பெக்டர் சொர்ண மணி, நெடுஞ்சாலை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், எஸ்.ஐ.,க்கள் சுப்புராஜ், கிருஷ்ணசாமி, வைரமுத்து, செய்யது இப்ராகிம் கலந்து கொண்டனர்.
Related posts
-
தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் அறிவிப்பு
தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி அலுவலர்கள்ராஜபாளையம் கல்யாணகுமார், மாவட்ட வழங்கல் ஸ்ரீதர், தாசில்தார், ராஜபாளையம், 94450 00661, அலுவலர், 94450... -
பி.ஆர்.ஓ., கமிஷனர் இடமாற்றம்
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் கருப்பண ராஜவேல் தென்காசிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திருவள்ளூர் உதவி செய்தி தொடர்பு... -
பி.ஆர்.ஓ., கமிஷனர் இடமாற்றம்
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் கருப்பண ராஜவேல் தென்காசிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திருவள்ளூர் உதவி செய்தி தொடர்பு...