வனஉயிரின சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வனஉயிரின சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்றும், நாளையும் நடக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகபகுதியில், புலி, சிறுத்தை, கரடி, யானை, மான்கள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கையை கணக்கிடும் பொருட்டு ஆண்டுதோறும் பிப்ரவரியில் கணக்கெடுப்பது வழக்கம்.தற்போது அதிக மழை பெய்த நிலையில் வனப்பகுதியில் கணக்கெடுக்கும்பணிக்கான முன்னேற்பாடு பணிகள் ஒரு வாரமாக நடந்தநிலையில் தற்போது வனத்துறையினர் நவீன அறிவியல் முறையில் இன்றும், நாளையும் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.

Read More

பள்ளிகல்லுாரி செய்திகள்

வளாக நேர்முக தேர்வுசிவகாசி: காளீஸ்வரி கல்லுாரி வேலைவாய்ப்பு அமைப்பு மூலம் கேரளாவை சேர்ந்த ஸ்மார்ட் ஆங்கில மொழி நிறுவனத்தின் காலி பணியிடங்களுக்கான வளாக நேர்முகத் தேர்வு நடந்தது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கேரளா ஸ்மார்ட் ஆங்கில மொழி நிறுவன மனிமவள மேம்பாட்டு அமைப்பாளர் அரவிந்த் பேசினார். 235 மாணவர்களில் 104 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.ஊழல் ஒழிப்பு உறுதிமொழிஅருப்புக்கோட்டை: எஸ்.பி.கே.. கல்லுாரியில் என்.சி.சி., சார்பாக ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். கல்லுாரி செயலர் சங்கரசேகரன் முன்னிலை வகித்தார். முதல்வர் முத்துச்செல்வன் வரவேற்றார். விருதுநகர் 28 பட்டாலியனை சேர்ந்த ஹவில்தார் புஸ்பராஜ், பாலமுருகன் பேசினர். தேவாங்கர், சவுடாம்பிகா இன்ஜி., பாலிடெக்னிக் என்.சி.சி., மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன்…

Read More

சிவகாசியில் துவங்கியது மாநில தடகள போட்டி

சிவகாசி : விருதுநகர் மாவட்ட அத்லெட்டிக் சங்கம் சார்பில் மாநில அளவிலான ‘அத்லெட்டிக் சாம்பியன்சிப் 2021 ‘போட்டிகள் சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லுாரியில் துவங்கியது. இதை கலெக்டர் கண்ணன், எஸ்.பி., பெருமாள், காளீஸ்வரி குழும தலைவர் செல்வராசன், மெப்கோ கல்லுாரி முதல்வர் அறிவழகன், தமிழ்நாடு அத்லெட்டிக் சங்கம் இணை செயலாளர் லதா, பொருளாளர் ராஜேந்திரன் துவக்கி வைத்தனர். கலெக்டர் பேசியதாவது: கொரோனா காலம் 10 மாதங்கள் முடிந்து விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை மைதானத்தில் பார்க்கும் போது மனதிற்கு எழுச்சி, உற்சாகம் கிடைக்கிறது. சிறந்த வீரன் உருவாவதற்கு உடற்கட்டு, பயிற்சி போதாது. போதுமான மன உறுதியும் இருந்தால் மட்டுமே எந்த போட்டியானாலும் எளிதாக வெற்றி பெற முடியும். போட்டியில் வெற்றி பெறுவதை விட பங்கேற்பது மிக முக்கியமானது,என்றார். தேசிய கொடி, மாநில அத்லெட்டிக் கொடி, மாவட்ட அத்லெட்டிக்…

Read More