பள்ளிகல்லுாரி செய்திகள்

வளாக நேர்முக தேர்வுசிவகாசி: காளீஸ்வரி கல்லுாரி வேலைவாய்ப்பு அமைப்பு மூலம் கேரளாவை சேர்ந்த ஸ்மார்ட் ஆங்கில மொழி நிறுவனத்தின் காலி பணியிடங்களுக்கான வளாக நேர்முகத் தேர்வு நடந்தது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கேரளா ஸ்மார்ட் ஆங்கில மொழி நிறுவன மனிமவள மேம்பாட்டு அமைப்பாளர் அரவிந்த் பேசினார். 235 மாணவர்களில் 104 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.ஊழல் ஒழிப்பு உறுதிமொழிஅருப்புக்கோட்டை: எஸ்.பி.கே.. கல்லுாரியில் என்.சி.சி., சார்பாக ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். கல்லுாரி செயலர் சங்கரசேகரன் முன்னிலை வகித்தார்.

முதல்வர் முத்துச்செல்வன் வரவேற்றார். விருதுநகர் 28 பட்டாலியனை சேர்ந்த ஹவில்தார் புஸ்பராஜ், பாலமுருகன் பேசினர். தேவாங்கர், சவுடாம்பிகா இன்ஜி., பாலிடெக்னிக் என்.சி.சி., மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் செய்தார். ஒருங்கிணைப்பாளர் கணேசன் நன்றி கூறினார்.கலசலிங்கம் தலைவருக்கு விருதுஸ்ரீவில்லிபுத்துார்: டெல்லி இந்தோ யுனிவர்சல் அமைப்பின் சார்பில் சிறந்த செயல் திறன், கல்வியாளர், ஆராய்ச்சிகட்டுரை வெளியீடுகளுக்கான விருதுக்கு கலசலிங்கம் பல்கலை துணைத்தலைவர் சசிஆனந்த், துணைவேந்தர் நாகராஜ், பேராசிரியர் சிவப்பிரகாசை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதை நிர்வாக இயக்குனர் டாக்டர் கிருஷ்ணா வேதுலா அறிவித்த நிலையில் பல்கலையில் நடந்த கருத்தரங்கில் அமெரிக்க சான்பிரான்சிஸ்கோ பல்கலை பேராசிரியர் கிளாரி எப்கோமிஸ், துணைவேந்தர் நாகராஜூடம் வழங்கினார். சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பித்த பேராசிரியர்கள் வனிதா, கபிலன் ஆகியோருக்கும் விருது வழங்கபட்டது. பதிவாளர் வாசுதேவன் வாழ்த்தினார். பேராசிரியர் ஆறுமுகபிரபு நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment