ஆக்கிரமிப்புக்கு வழிவிடும் நகராட்சி

விருதுநகர் : விருதுநகர் சி.எஸ்.ஐ., தேவாலயம் எதிர்புறம் செல்லும் 40 அடி அகல நேருஜிநகர் ரோடு 32 அடியாக குறுகி அமைக்கப்பட்டதால் ஆக்கிரமிப்புக்கு நகராட்சியே வழிவிடும் வகையில் அமைந்துள்ளது.

விருதுநகர் நகராட்சி சார்பில் நகர்ப்பகுதிகளில் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் 40 அடி இருந்த சி.எஸ்.ஐ., தேவாலயம் எதிர்புறம் செல்லும் நேருஜிநகர் ரோடு தற்போது புதிதாக 26 அடியாக குறுக்கி ரோடு அமைக்கப்பட்டுள்ளது. முன்பு 40 அடியில் இருபுறமும் தலா நான்கு அடி என எட்டு அடிக்கு பேவர் பிளாக் நடைபாதை போடப்பட்டிருந்தது. மீதமுள்ள 32 அடிக்கு தார் ரோடு முழுமைக்கும் இருந்தது. இதில் தற்போது 26 அடி மட்டுமே ரோடு அமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு பகுதியான நடைபாதையில் பேவர் பிளாக் பதிக்கப்படவில்லை. இதனால் ரோடு மிகவும் குறுகி காணப்படுகிறது.

இது ஆக்கிரமிப்புக்கு ஏதுவாக மாறிவிடும். மேலும் இப்பகுதியில் மதுரை பஸ்கள் சென்று வருவதால் ஒரே நேரத்தில் 2 பஸ்கள் வந்தால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கச்சேரி ரோட்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக நகராட்சி ரோடுகளை மாநில நெடுஞ்சாலை யுடன் இணைக்கும் முக்கிய ரோடு இதுவாகும். இதே பகுதியில் கொரோனா வுக்கு முன்பு தான் சாக்கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால் தனியார் நிறுவனங்கள், கடைகளின் படிக்கட்டுகள் அகற்றப்பட்டன.இந்நிலையில் தற்போது ரோட்டை குறுகி போட்டிருப்பது ஆக்கிரமிப்புக்கு வழிவிடும் வகையில் உள்ளது. நகராட்சி நிர்வாகம் ரோட்டை முன்பு போல் அகலப்படுத்தி அமைப்பது அவசியமாகிறது

Related posts

Leave a Comment