சாலை பாதுகாப்பு முகாம்

சிவகாசி : சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவகம் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் தலைமை வகித்தார். அணில்குமார் கண் மருத்துவமனை டாக்டர் அணில்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் சிவகாசி போலீசார் சார்பில் சிவகாசி சார்பு நீதிமன்றம் முன்பு பொதுமக்களுக்கு ஹெல்மெட் மற்றும் சீல் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நீதிபதிகள் கல்யாண மாரிமுத்து, சந்தனகுமார், எஸ்.ஐ., க்கள் ராமநாதன், கணேசன் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment