பசுமை பணியில் இன்ஜினியரிங் சகோதரர்கள்

சிவகாசி : சிவகாசி அருகே கல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சகோதரர்கள் அருண் 24, ஸ்ரீகாந்த் 21. இன்ஜினியர்களான இவர்கள் பசுமையான தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் சென்று மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள்.

இதற்காக அவர்கள் சைக்கிளிலே ஒவ்வொரு கிராமமாக செல்கிறார்கள். வீடுகளுக்கு கொடுப்பதோடு அவர்களே மரக்கன்றுகளை நடுகின்றனர்.மருத்துவமனை வளாகங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். மக்களிடம் பசுமை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றனர்.பசுமை தமிழகம் உருவாக்குவதற்காக இந்தாண்டு விருதுநகர் மாவட்ட முழுவதும் சைக்கிளில் சென்று வீடுகளுக்கு மரக்கன்றுகள் வழங்க முடிவு செய்தனர்.

அதன்படி தங்களது சொந்த ஊரான கல்லமாநாயக்கன்பட்டியிலிருந்து சைக்கிளில் விழிப்புணர்வு பயணத்தை துவக்கி வீடுகளுக்கு மரக்கன்று வழங்கினர்.இவர்கள் கூறியதாவது: 2019 ல் கன்னியாகுமரியிலிருந்து மும்பை வரை சைக்கிளிலேயே சென்று பிளாஸ்டிக் பாதிப்பு பற்றி பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். தொடர்ந்து பசுமையான தமிழகத்தை உருவாக்குவதற்காக தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நட உள்ளோம். தற்போது விருதுநகர் மாவட்டத்தில் கல்லமநாயக்கன்பட்டி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், இ.டி.ரெட்டியபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இதுவரை 2000 மரக்கன்றுகள் நட்டுள்ளோம். வருங்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டமாக சைக்கிளில் சென்று மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். பசுமை தமிழகத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம், என்றனர்.

Related posts

Leave a Comment