பள்ளி, கல்லுாரி செய்திகள்

மாணவிகளுக்கு விஞ்ஞானி விருதுஸ்ரீவில்லிபுத்துார் : பெருமாள்பட்டி காமராஜர் மெட்ரிக்., மேல்நிலைபள்ளி ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் முத்துமாரி, பவித்ரா . தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்று இளம்விஞ்ஞானிகள் விருதினை பெற்றனர். சாதனை மாணவிகள், ஆசிரியர்கள் கார்த்தீஸ்வரி, முருகேஸ்வரி, பொன்மணி, காளீஸ்வரி ஆகியோரை நாடார் உறவின்முறை நிர்வாகிகள் முப்புடாரி, சுந்தர், முத்துராஜ், பள்ளி நிர்வாகிகள் ஜோஸ்வா, பெரியசாமி, முதல்வர் ஆனந்தகீதா பாராட்டினர்………….திருவள்ளுவர் தின விழா

விருதுநகர்:வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லுாரியில் எம்.எஸ்.பி.,கருப்பையா நாடார் அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் தின விழா நடந்தது. மானேஜிங் போர்டு தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். செயலாளர் நாராயணமூர்த்தி வரவேற்றார். செந்திக்குமார நாடார் கல்லுாரி மாரிராஜ் பேசினார். திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிர்வாகி தியாகராஜன் பரிசு வழங்கினார். முதல்வர் ஜவஹர் நன்றி கூறினார்…………..பள்ளியில் பயிற்சி பட்டறைஸ்ரீவில்லிபுத்துார் : தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச்சங்கத்தின் சார்பில் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பட்டறை நடந்தது.மாநில ஊடகபிரிவு தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். தென்மண்டல செயலாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சதீஷ், துணைபொதுச்செயலாளர் விஜயகுமார் பேசினர். தேவகுமார் நன்றி கூறினார்.தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகை வழங்கவும், ஆசிரியர்கள் நலன்கருதி நலவாரியம் அமைக்க கோரி தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது

Related posts

Leave a Comment