விலை குறைந்தது பட்டாணி

விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் பட்டாணி பருப்பு விலை குறைந்தும் உருட்டு உளுந்து வகைகள், பாமாயில் விலை அதிகரித்தும் காணப்படுகிறது.

மார்க்கெட்டில் கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.100 அதிகரித்து ரூ.2550, நல்லெண்ணெய் ரூ.3900, சன்பிளவர் எண்ணெய் ரூ.2150, பாமாயில் ரூ.40 அதிகரித்து ரூ.1820, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.200 அதிகரித்து ரூ.4200 ஆக உள்ளது. 100 கிலோ சர்க்கரை ரூ.80 குறைந்து ரூ.3440, மைதா 90 கிலோ பை ரூ.3520, 55 கிலோ பொரிகடலை ரூ.50 குறைந்து ரூ.3800, 100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ.8,500, 100 கிலோ நயம் புதுசு லயன் ரூ.9,100, நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.200 குறைந்து ரூ.8200, உளுந்து லயன் ரூ.100 குறைந்து ரூ.8500, மசூர் பருப்பு பருவட்டு ரூ.200 அதிகரித்து ரூ.7600க்கு விற்பனையாகிறது.

உருட்டு உளுந்து நாடு வகை ரூ.500 அதிகரித்து ரூ.11,600, பர்மா வகை ரூ.300 அதிகரித்து ரூ.9400, 100 கிலோ தொலி உளுந்தம்பருப்பு நாடு வகை ரூ.9000, 100 கிலோ பாசிப்பருப்பு ரூ.9700, பட்டாணி பருப்பு ரூ.500 குறைந்து ரூ.7600, குவிண்டால் ஆந்திரா ஏ.சி., வத்தல் ரூ.13,000 முதல் 14,000க்கு விற்கப்படுகிறது.

Related posts

Leave a Comment