ஆன்லைன் மூலமாக உங்களுக்கு பணம் அனுப்புவதாக சொல்லி QR Code அனுப்பி ஸ்கேன் செய்ய சொன்னால், ஸ்கேன் செய்ய வேண்டாம். உங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட வாய்ப்புள்ளது.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs
Read MoreDay: February 5, 2021
Virudhunagar District Police news -05-02-2021
32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு,ராஜபாளையம் வடக்கு காவல்துறையினர், ராஜபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ராஜபாளையம் அரசு மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தினர். #Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs
Read Morehttps://www.ediindia.org/Career.aspx
INVITES APPLICATIONS FOR THE POST OF MASTER TRAINERLocation: Keerathurai, Madurai, Tamil NaduQualification & Experience:Master’s Degree or equivalent in Social Work/development studies or other related fields and interest in working with urban poor womenMust have 1-2 years of experience in Micro enterprise/ Entrepreneurship Development/ Self Employment/ Women Livelihood related schemes and projects. Candidate should have working proficiency in Tamil and English. Preference will be given to candidates from Madurai district, Tamil NaduThe candidate should possess good documentation and reporting skills, high degree of computer literacy, data analysis ability and good communication…
Read Moreரூ.1.42 லட்சம் ஊதியத்தில் சிவில் விமான போக்குவரத்துத் துறையில் பணியாற்ற ஆசையா?
மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் சிவில் விமான போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள Senior Inspector (Technical) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.42 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சிவில் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : Ministry of Civil Aviation மேலாண்மை : மத்திய அரசு பணி : Senior Inspector (Technical) மொத்த காலிப் பணியிடம் : 01 வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க. ஊதியம் : மாதம் ரூ.44,900…
Read Moreகும்மிருட்டில் தெருக்கள்… மாதம் ஒரு முறை குடிநீர்; அவதியில் ஜெயநகர் மக்கள்
அருப்புக்கோட்டை : கும்மிருட்டில் தெருக்கள், மாதம் ஒரு முறை குடிநீர் என்பன போன்ற பிரச்னைகளுடன் அருப்புக்கோட்டை கஞ்ச நாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த ஜெயநகர் மக்கள் தவிக்கின்றனர். 15க்கு மேற்பட்ட தெருக்கள் உள்ள இந்நகர் புறநகர் பகுதியாக இருப்பதால் எந்தவித அடிப்படை வசதிகள் இல்லை. தெருக்களில் மின்விளக்கு இன்றி இருளாக இருப்பதால் இரவு நேரங்களில் பெண்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர்.இருளை பயன்படுத்தி குடிமகன்கள் குடியிருப்புகளுக்கு அருகில் கும்மாளமிகின்றனர். சமூக விரோத செயல்களும் அரங்கேறுகிறது. திருச்சுழி ரோட்டிலிருந்து ஜெயநகருக்கு செல்லும் ரோடு கிடங்காக உள்ளது. அரசு நிதி மூலம் கட்டப்பட்ட மண்புழு உர கூடம், கால்நடை தொட்டி பயனற்று கிடக்கிறது. ஊராட்சி மூலம் வழங்கப்படும் தாமிரபரணி குடிநீர் ஒரு மாதத்திற்கு ஒரு முறைதான் வருகிறது. தண்ணீருக்காக மக்கள் அலைகின்றனர். ஊராட்சி மூலம் கழிப்பறை கட்டப்பட வேண்டும். மயானத்திற்கு செல்லும் ரோடும்…
Read Moreவிருதுநகரில் மழை சேதம்: மத்திய குழுவினர் ஆய்வு
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் ஜனவரியில் தொடர் மழை பெய்தது. காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, வத்திராயிருப்பு பகுதிகளில் மழைநீரில் பயிர்கள் முழ்கின. இதன் பாதிப்புகளை மாநில பேரிடர் ஆணையர் ஜெகநாதன் தலைமையில் டில்லி உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி, ஹைதராபாத் மத்திய வேளாண் விவசாயிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் எண்ணெய் வித்து வளர்ச்சி இயக்குனர் மனோகரன், செலவின துறை நிதி அமைச்சகத்தின் துணை இயக்குனர் மகேஷ்குமார் அடங்கிய மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அருப்புக்கோட்டை செங்குளம், கீழ்க்குடி, மறவர்பெருங்குடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களில் பாதித்த பயிர்களை பார்வையிட்டனர். கலெக்டர் கண்ணன், டி.ஆர்.ஓ., மங்களராமசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர் . வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை கணக்கெடுப்பில் 11,578 எக்டேர் பயிர்கள் பாதித்து உள்ளதாக தெரியவந்துள்ளது.மறியல்மறவர்…
Read Moreஸ்ரீவி.,யில் தினமும் வருது
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகதோப்பில் தினமும் 30 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைத்தும் குடிநீர் சப்ளை 10 நாட்களுக்கு ஒருமுறை வழங்குவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஸ்ரீவி.,யில் தாமிரபரணி குடிநீரானது 120 கி.மீ., துாரம் கடந்து சப்ளை செய்யபட்டு வந்தது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் தினசரி குடிநீர் சப்ளை வழங்கமுடியாதநிலை தொடர்ந்தது. இந்நிலையில் உள்ளூர் நீராதாரமான செண்பகதோப்பு பகுதி நகராட்சி கிணறுகள் சீரமைக்கபட்ட நிலையில் தினமும் 30 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. ஆனாலும் நகருக்கு 10 முதல் 12 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் சப்ளை செய்கிறது நகராட்சி நிர்வாகம். இதனால் நகர் மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர்.நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், நகராட்சி அலுவலக மேல்நிலை தொட்டியிலிருந்து தான் ஊரணிபட்டி, பெருமாள்பட்டி, திருமுக்குளம் பகுதி மேல்நிலை தொட்டிகளுக்கு தாமிரபரணி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதன்…
Read Moreமுடங்கிய குற்றப்பிரிவு…தத்தளிக்கும்’ டிராபிக்’; நெரிசல், திருட்டால் அல்லல்படுது அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை : போலீசார் இல்லாது முடங்கிய குற்றப்பிரிவால் அதிகரிக்கும் திருட்டு, போக்குவரத்து பிரிவில் போதிய போலீசார் இன்றி நெரிசல் என தினமும் அவதியை சந்திக்கின்றனர் அருப்புக்கோட்டை நகர் மக்கள். அருப்புக்கோட்டையில் போலீஸ் குற்றப்பிரிவு தனியாக இயங்கி வருகிறது. நகரில் பகல் மற்றும இரவில் ரோந்து செல்ல, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளவர்களை கண்டு பிடிப்பது என பல பணிகள் குற்ற பிரிவின் பணியாக உள்ளது. ஆனால் இப்பிரிவிற்கு போலீசாரே இல்லாத நிலையில் ஒரு இன்ஸ்பெக்டரே உள்ளார். இவரோ ,சட்டம், ஒழுங்கு பிரிவு போலீசாரை கொண்டே பணிகளை செய்ய வேண்டிய நிலை உள்ளது. 20க்கு மேற்பட்ட போலீசார் இருக்க வேண்டிய இப் பிரிவில் ஒரு போலீசார் கூட இல்லாது குற்ற பிரிவானது முடங்கி கிடக்கிறது. தற்போது நகரில் பெருகி வரும் தொடர் குற்றங்களுக்கு குற்ற பிரிவில் போலீசார் இல்லாததே காரணமாக…
Read Moreவீணடிப்பு! காட்சிபொருளான மினிவிசை பம்பு தொட்டிகள்
சிவகாசி : மாவட்டத்தில் நகர், கிராம பகுதிகளில் அமைக்கப்பட்ட மினிவிசைப் பம்புடன் கூடிய தொட்டிகள் செயல்படாது காட்சி பொருளாக மாறியதால் பொதுமக்கள் புழக்கத்திற்கு தண்ணீரின்றி சிரமப்படுகின்றனர். மாவட்டத்தில் அனைத்து நகர், கிராம பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தலா ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மினி விசைப்பம்புடன் கூடிய தொட்டி அமைக்கப்பட்டது. அந்தந்த இடத்திலேயே ‘போர்வெல்’ அமைக்கப்பட்டு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. குடிநீர் பற்றாக்குறையாக இருந்தாலும் இதிலிருந்து கிடைக்கும் தண்ணீர் குளிக்க, துணி துவைக்க உள்ளிட்ட புழக்கத்திற்கு பயன்பட்டு வந்ததால் மக்கள் சிரமமின்றி இருந்தனர். தற்போது இத்தொட்டிகள் 70 சதவீதம் பயன்பாட்டில் இல்லாமல் காட்சி பொருளாக உள்ளன. இதனிடையே சில ஆண்டுளுக்கு முன் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தொட்டிகளும் பயன்பாட்டில் இல்லை. இதனால் மக்கள் புழக்கத்திற்கு தண்ணீரின்றி…
Read More