சாத்துார் : சாத்துாரில் 10 நாட்களாகியும் குடிநீர் வராததால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இங்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நாள்தோறும் 30 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும். ஜனவரியில் பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சாத்துாருக்கான குடிநீர் பம்பிங் செய்யும் கிணறுகளில் மோட்டார்கள் நீரில் மூழ்கி பழுதாகின. இதன் காரணமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. தற்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வடிந்த நிலையிலும் குடிநீரின் அளவு நாள்தோறும் குறைகிறது. இந்த நீரை கொண்டு நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால் மக்கள் டேங்கர் லாரிகளில் விற்பனை செய்யப்படும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர் . இதனால் கூடுதல் செலவு ஏற்படுவதோடு வசதியற்றவர்கள் உப்பு தண்ணீர் தேடி குடங்களுடன் தெருத்தெருவாக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி குடிநீர் அளவை…
Read MoreDay: February 8, 2021
விசைத்தறியில் கைத்தறி; அமலாக்க துறை ஆய்வு
தளவாய்புரம் : தளவாய்புரம் பகுதி விசைத்தறி கூடங்களில் கைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடிய சேலைகளைசட்ட விரோதமாக நெய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து கைத்தறி அமலாக்க உதவி சட்ட அலுவலர் திருவாசகம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தளவாய்புரம் செனாய் நகர் கக்கன் தெருவை சேர்ந்த முருகன் 40, கைத்தறி சேலை உற்பத்தி செய்வது கண்டு பிடிக்கப்பட்டது.அவர் மீது தளவாய்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
Read Moreமதுரை விவசாயிகள் தாராளம்: ஆவியூர் விவசாயிகள் நெகிழ்ச்சி
காரியாபட்டி : பூச்செடிகள் அழிந்தாலும் பரவாயில்லை தண்ணீர் கொண்டு செல்லுங்கள் என கூறிய மதுரை விவசாயிகளை கண்டு ஆவியூர் கிராமத்தினர் நெகிழ்ச்சி அடைந்தனர். காரியாபட்டி பகுதியில் கனமழை, புரவி புயலுக்கு நிரம்பாத பெரிய கண்மாய்களில் ஆவியர் கண்மாயும் ஒன்று. இதற்கு முக்கிய காரணம் வரத்துக்கால்வாய் இல்லாதது தான். கண்மாய் வறண்ட நிலையில் காணப்பட்டதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் சூழ்நிலை இருந்தது. இந்நிலையில் நிலையூர் கால்வாயில் வைகை ஆற்றிலிருந்து வந்த தண்ணீரை பகிர்ந்தளிக்க ஆவியூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அக்கால்வாய் பாசனத்தில் பயன்பெறும் மதுரை மாவட்ட கிராமத்தினர் மறுத்தனர். ஆவியூர் ஊராட்சித் தலைவர் தனலட்சுமி ரவி மதுரை மாவட்ட கிராம உள்ள விவசாயிகளிடம் உருக்கமாக பேசியதை யடுத்து தண்ணீர் திறந்துவிட சம்மதித்தனர்.இரவும் பகலும் பாராமல் வரத்துக்கால்வாய் ஏற்படுத்தி தண்ணீர் கொண்டு வந்ததையடுத்து கண்மாய்க்கு ஓரளவிற்கு தண்ணீர்…
Read Moreரோட்டோரங்களில் இல்லை மரங்கள்; சிரமத்தில் பாதயாத்திரை பக்தர்கள்
அருப்புக்கோட்டை : ரோட்டோரங்களில் மரங்கள் இல்லாததால் திருச்செந்துாருக்கு பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். மதுரை-துாத்துக்குடி அருப்புக்கோட்டை வழியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டது. இதற்காக நெடுஞ்சாலை துறையினரால் ரோட்டின் இருபுறமும் நின்ற நிழல்தரும் மரங்களை வெட்டி அகற்றினர். ஒரு மரத்திற்கு 10 மரம் வைத்து பராமரிக்கப்படும் என வெட்டப்பட்டது தான் மிச்சம். இன்றுவரை ஒரு மரங்களை நடவில்லை. பெயருக்கு ஆங்காங்கு மரக்கன்றுகளை வைத்து அவற்றை முறையாக பராமரிப்பு செய்யாததால் அவைகளும் கருகி மாயமாகி விட்டன. மதுரை, அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுபகுதி முருகன் பக்தர்கள் திருச்செந்துார் கோயிலுக்கு இந்த ரோட்டை பயன் படுத்தி தான் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அன்று ரோட்டின் இருபுறமும் நன்கு வளர்ந்துள்ள மரங்களால் கிடைக்கும் நிழலில் களைப்பு தெரியாமல் நடந்து சென்று வந்த நிலையில் மரங்கள் இன்றி பாதயாத்திரை…
Read Moreமன அழுத்தம் தீர்க்கும் ஆணிவேராக கிராமம்; தென் மண்டல ஐ.ஜி., முருகன் பெருமிதம்
சேத்துார் : ”மன அழுத்தத்தை தீர்க்கக்கூடிய ஆணி வேரே கிராமம்தான் ,’ என, தென் மண்டல ஐ.ஜி., முருகன் பேசினார். ராஜபாளையம் அருகே சேத்துார் அன்னை மன நல மருத்துவமனை வளாகத்தில் நடந்த ‘மனம் பிட்’இணையதளம் துவக்க விழாவில் அவர் பேசியதாவது: ஆரோக்கியமான மனநிலை, ஆரோக்கியமான வாழ்க்கையை கொண்டதாக இந்த இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. கிராமிய உணர்வோடு கிராமத்தில் துவங்கப்பட்டுள்ள இந்த இணையதளம் பலருக்கு தீர்க்கப்படாத பிரச்னைகளை தீர்க்கக் கூடியதாக இருக்கும். மன அழுத்தத்தை போக்கக்கூடிய ஆணிவேரே கிராமம் தான். கிராமத்து உறவு தொன்றுதொட்டு வருவதாக திருமூலர் தெரிவித்துள்ளார். நேற்றைய பொழுதை விட இன்றைய பொழுது மிக அருமை என்பது குறித்து சிந்தியுங்கள், என்றார். சி.இ.ஓ., ராஜநாராயணன், டாக்டர்கள் அனந்தகிருஷ்ணன், புதிய ராஜ், தொழிலதிபர் சந்திரன்ராஜா பேசினர். டாக்டர் அர்ஜூனன் நன்றி கூறினார்.
Read More