அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள்… அவசியம்!

சாத்துார் : கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போதிய சமூக இடைவெளியுடன் அமர அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தருவது அவசியமாகிறது. கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மற்றொரு மனிதருக்கு பரவி வருகிறது. தற்போது தமிழகத்தில் அதன் தாக்கம் குறைந்து வருகிறது . இதனால் அரசு கொரோனா கால ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது .தற்போது பள்ளிகளில் 9, 10, 11, 12, வகுப்புகள் வழக்கம்போல் நடைபெற அரசு அனுமதி அளித்துள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தி உள்ளது. ஆசிரியர்கள், 50 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பை 25 பேர் கொண்ட இரு வகுப்பாக பிரித்து மாணவர்களை இடைவெளி விட்டு அமர வைத்து உள்ளனர். இதனால் வகுப்பறைகள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. தனியார் பள்ளிகள் போன்று அரசு பள்ளிகளில் இது போன்ற வசதியை செய்து தர…

Read More

ரெங்கப்பாளையத்தில் மினி கிளினிக் ; அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்தார்

சிவகாசி : சிவகாசி அருகே ரெங்கப்பாளையம், திருத்தங்கல் முருகன் காலனியில் மினி கிளினிக்கை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: முதல்வர் பழனிசாமி அரசு கடைக்கோடி மக்களுக்கும் தரமான சுகாதார சேவைகள் கிடைக்க பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத இடங்களை கண்டறிந்து மினி கிளினிக்குகள் துவக்கி வைக்கப்பட்டுஉள்ளது,என்றார். திருத்தங்கல் நகராட்சி கமிஷனர் பாண்டித்தாய், பி.டி.ஓ.,க்கள் சீனிவாசன், ராமராஜ், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் கலுசிவலிங்கம் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட கூட்டுறவு வேளாண் விற்பனைக்குழு தலைவர் தெய்வம், நிர்வாகிகள் சீனிவாசன், காசிராஜன், ஜெ பேரவை குமார், சங்கர்ஜி, கார்த்திக், ஜெய்ராம், ராமர், தியாகராஜன், திருத்தங்கல் சரவணன் கலந்து கொண்டனர்.

Read More

முன்னாள் மாணவர் சங்க குடும்ப விழா

சிவகாசி : திருத்தங்கல் எஸ்.ஆர்.என்., அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பள்ளியில் குடும்ப விழா கொண்டாடப்பட்டது. பள்ளி துவங்கிய ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் முதல் கடந்த ஆண்டு படித்து வெளியேறிய மாணவர்கள் என அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் 12 கண்காணிப்பு கேமராக்கள் பள்ளியில் பொருத்தப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. சங்க தலைவர் பத்மசீனிவாசன் வரவேற்றார். செயலாளர் சங்கர், பொருளாளர் சுரேஷ் அறிக்கை சமர்ப்பித்தனர். கவுரவ தலைவர் ரேவதி ,ஆலோசகர் ஜெகதீசன், பேசினர். தொழிலதிபர்கள் ஜெய்சங்கர், முத்துமாரிகணேசன், இன்ஸ்பெக்டர் ராஜா, ரமேஷ், கேசவன் கலந்து கொண்டனர். முன்னாள்…

Read More

ஆண்டாள் நகரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு,நெருக்கடி

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பஜார் வீதிகளில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் நடந்து செல்லமுடியாத அளவிற்கு, தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் டூவீலர்கள் முதல் கனரக வாகனங்கள் வரை தாறுமாறாக நிறுத்தபடுவதால் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் தினமும் அவதிக்குள்ளாகின்றனர். பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ., சுற்றளவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, மார்க்கெட், கோயில்கள், சர்ச்சுகள், பள்ளி வாசல், வங்கிகள், மேல்நிலைபள்ளிகள், திருமண மண்டபங்கள் இருப்பதால் அதிக போக்குவரத்து நெருக்கடி தினமும் ஏற்படுகிறது. பஜார்வீதிகளோ சாலையோர சைக்கிள் ஸ்டாண்டுகளாக மாறி வருகிறது. பள்ளி வாசல் பகுதியிலிருந்து ஆண்டாள் கோயில் வாசல்வரை கடைகளின் விற்பனை பொருட்கள், டூவீலர்கள், தள்ளுவண்டிகள் என நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு நடந்து செல்வதற்கே பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். பொது நடைபாதையை மறித்து கற்கள் நட்டிருப்பதால் ஆம்புலன்ஸ்கள் செல்லமுடியாதநிலை உள்ளது. அரசு மருத்துவமனை வடபுறம் மற்றும் உழவர்சந்தை பகுதிகளில் பொதுமக்கள் நடந்து…

Read More

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டர் கார் முன்பு தர்ணா

விருதுநகர் : சிவகாசி பள்ளபட்டியில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஒரே குடும்பத்தை சேர்ந்த 10க்கு மேற்பட்ட பெண்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகாசி பள்ளபட்டியை சேர்ந்தவர் மீனா. இவரது குடும்பத்திற்கு சொந்தமான வீட்டிற்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதற்காக பட்டா நிலத்தை அளந்து தர கோரியும் பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும் வருவாய் கோட்டாட்சியர்கள், தாசில்தார்களிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மனமுடைந்த மீனாவின் குடும்பத்தை சேர்ந்த 10க்கு மேற்பட்ட பெண்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்ற கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் கலைந்து சென்றனர்.

Read More