அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள்… அவசியம்!

சாத்துார் : கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போதிய சமூக இடைவெளியுடன் அமர அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தருவது அவசியமாகிறது.

கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மற்றொரு மனிதருக்கு பரவி வருகிறது. தற்போது தமிழகத்தில் அதன் தாக்கம் குறைந்து வருகிறது . இதனால் அரசு கொரோனா கால ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது .தற்போது பள்ளிகளில் 9, 10, 11, 12, வகுப்புகள் வழக்கம்போல் நடைபெற அரசு அனுமதி அளித்துள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தி உள்ளது.

ஆசிரியர்கள், 50 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பை 25 பேர் கொண்ட இரு வகுப்பாக பிரித்து மாணவர்களை இடைவெளி விட்டு அமர வைத்து உள்ளனர். இதனால் வகுப்பறைகள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.

தனியார் பள்ளிகள் போன்று அரசு பள்ளிகளில் இது போன்ற வசதியை செய்து தர முடியாத நிலை உள்ளது. பல பள்ளிகளில் மாணவர்களை மரத்தின் அடியில் வெறும் தரையில் அமர்ந்த படிக்கும் நிலை உள்ளது. காற்று வீசும் போது கிளம்பும் துாசியால் பாதிக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தருவது அத்தியாவசிய தேவையாக உள்ளது.கல்வி துறை இதன் மீது தற்போதே நடவடிக்கை எடுப்பது அவசியம்…….

தனியார் பங்களிப்பு அவசியம்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பாடம் கற்க வேண்டிய நிலை உள்ளது . இதற்காக கூடுதல் வகுப்பறைகள் அவசியமாகிறது . உதவும் மனப்பான்மை கொண்ட தனியார்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து கூடுதல் வகுப்பை போன்ற வசதிகளை செய்து தர முன்வர வேண்டும் .

Related posts

Leave a Comment