சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் செவ்வாய் பிரதோஷம் நடந்தது. மீனாட்சி சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. சாமி உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. ரகு, ரமேஷ் பட்டர்கள் நந்திபகவானுக்கு சிறப்பு அபிேஷகம், பூஜைகள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Read More

தனித்து நின்றாலும் உழையுங்கள் தே.மு.தி.க., அட்வைஸ்

விருதுநகர் : விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பில் தேர்தல் ஆலோசனை, செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் சையது காஜா ஷெரீப் தலைமையில் நடந்தது. நகர செயலாளர் ஏங்கல்ஸ், ஒன்றிய பொறுப்பாளர்கள் சேகர், ராஜ் வரவேற்றனர். மாவட்ட அவை தலைவர் ஜெயபாண்டி, பொருளாளர் முத்துவேல் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் அக்பர் பேசுகையில், ”கூட்டணியுடன் போட்டியிட்டாலும், தனித்தே போட்டியிட்டாலும் வெற்றிக்காக உழையுங்கள்,” என்றார். தேர்தல் பணிக்குழு செயலாளர் ஆறுமுக நயினார், நெசவாளர் அணி செயலாளர் கோதை மாரியப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் பாண்டியன், நிர்வாகிகள் சண்முகநாதன், வைரம், முருகன், சக்கரைதாயம்மாள், முருகேசன், கண்ணன், ஆனந்த மாரீஸ்வரன், காட்டுவா, ஜோசப் பங்கேற்றனர். மாற்று கட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தே.மு.தி.க.,வில் இணைந்தனர். ஒன்றிய அவைத்தலைவர் பட்டமுத்து நன்றி கூறினார்.

Read More

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தைபிரதோஷ வழிபாடு நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு உடல் வெப்ப பரிசோதனைக்கு பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கபட்டனர். கோயிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமகாலிங்கம் சுவாமிகளை பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜாபெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாதன் செய்திருந்தனர். பிப்.12 மதியம் 12:00 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

Read More

கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைப்பு

விருதுநகர்: கலெக்டர் அலுவலகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு கூடுதல் ஓட்டுச்சாவடிகளை அமைப்பது தொடர்பான அரசியல் கட்சிகளுடனான கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் கண்ணன் தலைமையில் நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஒட்டுச்சாவடிகளை பிரித்து கூடுதல் ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. சப் கலெக்டர் தினேஷ்குமார், நேர்முக உதவியாளர் காளிமுத்து, தேர்தல் தாசில்தார் அய்யக்குட்டி பங்கேற்றனர்.

Read More

மின்னணு வாக்காளர் அட்டை அறிமுகம்

விருதுநகர்: கலெக்டர் கண்ணன் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இதை ஜன 20ல் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற புதிய வாக்காளர்கள் www.nvsp.in என்ற இணையதள முகவரி, Voters helpline என்ற அலைபேசி செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக தகவல்களை 1950 என்ற இலவச எண்ணில் கேட்டறியலாம், என்றார்

Read More

வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர்: கலெக்டர் கண்ணன் கூறியதாவது: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெள்ளிதோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. பிப். 12ல் காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை நடக்கும் இம்முகாமில் 6 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டபடிப்பு வரை ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்களை தேர்வு செய்யப்பட உள்ளனர். 30 முதல் 45 வயதுடைய எல்.ஐ.சி., முகவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விரும்புவோர் முகாமில் பங்கேற்கும் முன் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வி தகுதியை பதிவு செய்ய வேண்டும், என்றார்.

Read More

அனுமதியின்றி இயக்கப்படும் மினிபஸ்கள்; தடுக்கக்கோரி பஸ்களை நிறுத்தி ஸ்டிரைக்

சிவகாசி: சிவகாசியில் அனுமதியின்றி இயக்கப்படும் மினிபஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகாசி பஸ் ஸ்டாண்டிலிருந்து பல்வேறு வழித்தடங்களில் அனுமதியின்றி மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் அரசு பஸ்களின் வசூல் பாதிக்கப்படுவதாக அதிகாரிகளிடம் டிரைவர்கள், கண்டக்டர்கள் புகார் தெரிவித்தனர். எனினும் அனுமதி இல்லாத வழித்தடத்தில் மினிபஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ்டாண்டில் பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நடந்த போராட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டி.எஸ்.பி., பிரபாகரன், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கை விட செய்தனர். பணிமனை மேலாளர் மாரியப்பன் தலைமையில் சப் கலெக்டர் தினேஷ்குமாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.

Read More

அனுமதியின்றி இயக்கப்படும் மினிபஸ்கள்; தடுக்கக்கோரி பஸ்களை நிறுத்தி ஸ்டிரைக்

சிவகாசி : விருதுநகரில் மாற்று திறனாளி மகனுடன் கஷ்ட ஜீவனம் நடத்திய விதவை பெண்ணிற்கு தி.மு.க., சார்பில் ரூ.2 லட்சம் நிதியை தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., வழங்கிானர். விருதுநகரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் சிவகாசி ரிசர்வ்லைன் ஆறுமுகா காலனியை சேர்ந்தவர் பாண்டிதேவி கலந்து கொண்டார். விதவை பெண்ணான தனக்கு 9 ம் வகுப்பு படிக்கும் மகள், மூளை வளர்ச்சி இல்லாத 13 வயது மகன் உள்ளனர். தனியார் வேலை வாய்ப்பு, அரசு உதவி கிடைக்கவில்லை என தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் கண்ணீர் மல்கி கதறினார். உரிய உதவிகள் செய்வேன் என ஸ்டாலின் கூறினார். இதையடுத்து தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., நேற்று பாண்டிதேவியை சந்தித்து மகளின் கல்வி செலவுக்கு உதவிடும் வகையில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வனராஜா, ஒன்றிய…

Read More

ரோட்டோரம் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றலாமே!

அருப்புக்கோட்டை : மாவட்டத்தில் ரோட்டோரம் பாதசாரிகள் நடக்க முடியாமலும், வாகனங்கள் ஒதுங்க முடியாமலும் அடர்த்தியாக வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகர், அருப்புக்கோட்டை வழியாக நான்கு வழிச்சாலை, ராஜாபாளையம் – கொல்லம், ராஜபாளையம் – தென்காசி இடையே தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. தவிர மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டுப்பட்ட ரோடுகள் பல உள்ளன. இவற்றில் ரோடு விரிவாக்கம் பணிக்காக அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. பராமரிப்பில்லாததால் ரோட்டோரங்களில் காடு போல் முட் செடிகள் வளர்ந்துள்ளன. பாதசாரிகள் ரோட்டோரம் நடந்து செல்லவும், டூவீலர்கள், வாகனங்கள் ஒதுங்க முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. சாலை பணியாளர்கள் ரோடுகளை பராமரித்து வந்தனர். தற்போது ரோடு பராமரிப்பு பணிகள் தனியாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் தொய்வு ஏற்பட்டுள்ளது. பராமரிப்பு பணி அவசியம் ரோடுகள் முறையான பராமரிப்பு இன்றி முட் செடிகள் காடு போல் வளர்ந்து…

Read More

தொண்டர் பணிக்கு ஆள் சேர்ப்பு; மதிப்பூதியம் மாதம் ரூ.5000

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட இளைஞர் அலுவலர் எல்.ஞானசந்திரன் கூறியதாவது: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, 1.4.2021ல் 18 வயது பூர்த்தியடைந்த 29 வயதுக்கு உட்பட்ட இருபாலர் விண்ணப்பிக்கலாம். இரண்டாண்டு வரை மாதம் தோறும் ரூ.5000 மதிப்பூதியம் வழங்கப்படும். சமூக பிரச்னைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இளங்கலை, முதுகலை பட்டம், கம்ப்யூட்டர் அறிவு, என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சாரணர், இளைஞர் மன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். www.nyks.nic.in என்ற இணைய வழியில் பிப்.,20க்குள் விண்ணப்பிக்கலாம் என்றார்.தொடர்புக்கு 04562 252 770, 94894 62140.

Read More