ஸ்ரீவி.,வன அலுவலர் கேரளாவிற்கு மாற்றம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வன உயிரின சரணாலய மாவட்ட வன அலுவலர் முகமது ஷாபாப் கேரளாவிற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

நேரடி ஐ.எப்.எஸ்., அதிகாரியான இவர், சில ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்துாரில் மாவட்ட வன அலுவலராக பணியாற்றி வந்தார். பணியின்போது எவ்வித அறிவிப்புமின்றி வனப்பகுதியில் ஆய்வு செய்வார். இவரது பணிக்காலத்தில் வனப்பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதித்ததாக ரேஞ்சர் சஸ்பெண்ட் செய்யபட்டார். சாப்டூர் வனப்பகுதியில் இறந்த யானை எரிக்கபட்டபோது அப்பகுதி ரேஞ்சர் உட்பட 4 வனத்துறை அலுவலர்களை சஸ்பெண்ட் செய்தார்.

சில வாரங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்துார் பந்தப்பாறையில் அனுமதியின்றி சந்தன மரங்கள் வைத்திருந்த கோவை வனத்துறை அதிகாரியின் மனைவி மீது வழக்கு பதிவு செய்தார். அதிகாரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கேரள வனத்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது மதுரை மாவட்ட வனஅலுவலர் ஆனந்த் கூடுதல் பொறுப்பாக நியமிக்கபட்டுள்ளார்.

Related posts

Leave a Comment