ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதி சிவன் கோயில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.சங்கரன் கோயில் ரோடு பகுதியில் உள்ள பறவை அன்னம் காத்தருளிய சுவாமி கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிவபெருமானுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்து தரிசனம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.* தளவாய்புரம் அருகே புனல்வேலி குருநாதர் ஜீவ சமாது கோயிலில் இரவு எட்டு மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அன்னதானமும் நடந்தது.ஏற்பாடுகளை புனல்வேலி குருநாதர் ஜீவ சமாது கோயில் அமாவாசை தின வழி பாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.* ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் உள்ள அஷ்டவரத ஆஞ்சநேயர் சுவாமிக்கு மகா ஹோமம், அபிேஷகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.