பராமரிப்பு இல்லா பூங்கா; புதர்கள் சூழ்ந்த மின் டவர்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை காந்தி நகரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு 25 லட்சம் ரூபாய் நிதியில் நகராட்சி பூங்கா அமைக்கப்பட்டது. இதன் அருகில் மின் வாரிய உயர் அழுத்த டவர் உள்ளது. பூங்கா அமைக்கும் போதே உயர் மின் அழுத்த டவர் பகுதியில் பூங்கா அமைக்க கூடாது என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். எதையும் காதில் வாங்காமல் நகராட்சியினர் பூங்கா அமைத்தனர்.இதுனால் கட்டி 2 ஆண்டுகள் ஆகியும் பூங்கா பயன்பாட்டிற்கு வரவில்லை. தற்போது பூங்கா முட்புதர்கள், செடி கொடிகள் வளர்ந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டது. அதன் அருகில் உள்ள மின் வாரிய டவரிலும் புதர்கள் சூழ்ந்து கொடி மேலே படர்ந்து செல்கிறது.இந்த பகுதி மக்கள்: நகராட்சி பூங்காவினாலும் பயன் இல்லை. அதில் அமைக்கப்பட்டுள்ள மின்வாரிய டவரும் பரமாரிப்பு இல்லாமல் உள்ளது. தற்போது உள்ள நிலையில் இரண்டுமே வேண்டாம் என்று சொல்லும் நிலையில் உள்ளோம்,என்றனர்.நகராட்சி உதவி பொறியாளர் காளிஸ்வரி : பூங்காவை பராமரிக்க ஆள் இல்லை. இன்னும் சில நாட்களில் பூங்கா சுத்தம் செய்யப்படும், என்றார்.

Related posts

Leave a Comment