பா.ஜ., மக்கள் சந்திப்பு கூட்டம்: நடிகை கவுதமி பங்கேற்பு

ராஜபாளையம்:ராஜபாளையம் தொகுதி யில் பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பு கூட்டங்களில் கட்சியினருடன் நடகை கவுதமி ஊர்வலமாக சென்று மத்தியரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

ராஜபாளையம் சட்டசபை தொகுதியின் பல்வேறு இடங்களில் பா.ஜ., சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதற்கு தலைமை வகித்த தொகுதியின் பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரும் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான நடிகை கவுதமி ராஜபாளையம் வேட்டை வெங்கடேஷ பெருமாள்கோயிலில் தரிசித்த பின் கட்சியினர் டூவீலரில் முன் செல்ல ஊர்வலமாக கலங்காபேரி புதுார், கம்மாப்பட்டி பகுதியில் பொது மக்களிடம் பேசினார். அப்போது, மத்திய அரசின் ஜன்தன் திட்டம், பிரதமர் காப்பீடு, முத்ரா வங்கி உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

Related posts

Leave a Comment