வேண்டாமே: சாக்கடைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கழிவு நீர் பிரச்னையோடு தொற்று அபாயம்

ராஜபாளையம்: மாவட்டத்தில் பெரும்பாலான கட்டடங்கள் தெருக்களில் சாக்கடைகளை ஆக்கிரமித்து கட்டப்படுவதால் கழிவு நீர் செல்வதில் பாதிப்போடு சுகாதார பணிகளுக்கும் தடை ஏற்படுகிறது.

எந்த ஒரு கட்டடமும் கட்டப்படுவதற்கு முன் உள்ளாட்சியில் முறையாக அனுமதி பெற வேண்டும். இதில் கட்டுமான உயரத்திற்கு ஏற்ப அடித்தளம், மாடிப்படிகள் வெளிப்புறம் அமைப்பு, கட்டட அமைப்பிற்கு ஏற்ப அவசர கால வழி ,கழிவு நீர் சாக்கடையில் இணைப்பு , மழை நீர் சேகரிப்பு உட்பட பல்வேறு அடிப்படைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால் இதன் படி அனைத்து குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டப்படுகின்றனவா என்றால் கேள்விக்குறியே .அதிகாரிகளின் ஆசியோடு பார்க்கிங் வசதியில்லாமலும், ரோட்டின் வெளிப்பகுதி வரை கட்டடங்களை நீட்டி வைப்பதும், வீடுகளின் கழிப்பறைகள், மாடியின் சன் சைடு பொதுப்பகுதிகளில் உள்ளது. இது போன்ற விதி மீறல்களால் நடைபாதையின்மை, போக்குவரத்து பாதிப்பும் தொடர்கிறது. பல பகுதிகளில் சாக்கடைகளில் கழிப்பறைகளை கட்டி ஆக்கிரமித்துள்ளனர் . இவற்றால் புதிதாக ரோடு அமைக்கும் போது பணிகளில் இடர்பாடு , சாக்கடையில் அடைப்புகளால் சுகாதார பிரச்னைகள் ஏற்படுகிறது.

இது மட்டுமன்றி நோய் பாதிப்புக்கும் மக்கள் ஆளாகின்றனர். ஆக்கிரமிப்போர் பாதிப்பு நமக்கும் ஏற்படும் என்பதை மறந்து விடுகின்றனர்.இது போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்…….தொற்றுக்கு வழிதெருக்களில் நடைபாதை, சாக்கடையை ஆக்கிரமித்து பலரும் கட்டுமான பணிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் சாக்கடை நீர் வெளியேற வழியின்றி தெருக்களில் தேங்குகிறது. இதன் மூலம் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.நோய் தொற்றாலும் பலரும் பாதிக்கின்றனர்.இதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுப்புராஜ், கடை உரிமையாளர், ராஜபாளையம்……….

Related posts

Leave a Comment