கட்டட பணிகளுக்கு பூமிபூஜை; அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு

சிவகாசி : சிவகாசி தொகுதி மேம்பாட்டு நிதியில் திருத்தங்கல் நகராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடக்க உள்ள புதிய கட்டட பணிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.

இங்குள்ள முத்துமாரியம்மன் காலனி ஹிந்து புதிரை வண்ணார் தெரு, அருந்ததியர் தெருவில் கலையரங்கம், இந்திரா நகர், முருகன் காலனி கவிதா நகரில் மினி கிளினிக் கட்டடம் என ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டுமான பணிகளுக்கான பூமிபூஜையை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.

திருத்தங்கல் நகராட்சி ஆணையாளர் பாண்டித்தாய், நகர செயலாளர் பொன் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, சுப்ரமணியன், தெய்வம், சண்முகக்கனி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ரமணா, செல்வம், கிருஷ்ணமூர்த்தி, விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சீனிவாசபெருமாள், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கருப்பசாமிபாண்டியன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment