20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி என்பது இயலாது

மாவட்ட சுகாதார பணிகள் துறையின் பணிகள் என்ன- சுகாதார பணிகள், மருத்துவ பணிகள், மருத்துவ கல்வி எனும் மூன்று துறைகள் உள்ளன. அவை தனித்தனி இயக்குனர்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. சுகாதார பணிகள் துறையின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தரமான மருத்துவ சிகிச்சை, மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.சுகாதார பணிகள் துறையின் கீழ் எத்தனை ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.- விருதுநகரில் 22, சிவகாசியில் 36 என 58 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர், செவிலியர் பற்றாக்குறை உள்ளதாபற்றாக்குறை இல்லை.மினி கிளினிக்குகள் தனி கட்டடங்களில் இயங்குகிறதா.- கிராம சுகாதார நிலையங்களில் இயங்குன்றன.கொரோனா கால தற்காலிக செவிலியர்களின் பணி காலம் நீட்டிக்கப்படுமா.- கொரோனா தொற்று பரவல் பூஜ்ஜியம் நிலையை அடையும் வரை நீட்டிக்கப்படலாம். மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கும்.குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் கண்டறியப்படுகிறதா.- ஆர்.பி.எஸ்.கே. எனும்…

Read More

விருதுநகரில் பூத் கமிட்டி மாநாடு, தாமரை எழுச்சி விழா

விருதுநகர் : விருதுநகர் சூலக்கரை மேடு வி.டி.,மில் எதிரில் திருவள்ளுவர் திடலில் விருதுநகர் சட்டசபை தொகுதிக்கான பூத் கமிட்டி மாநாடு, தாமரை எழுச்சி விழா நடந்தது. மாவட்ட தலைவர் கஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர்கள் பொன்ராஜன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல், பொதுக்குழு உறுப்பினர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் முருகனுக்கு ஆண்டாள் மாலை, கிளி அணிவித்து பூரண கும்ப மரியாதை வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. தேவேந்திரகுல வேளாளர் என சட்டமசோதா தாக்கல் செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேவேந்திரகுல வேளாளர்கள் 300க்கு மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து மாநில தலைவர் முருகனுக்கு நன்றி கூறினர். 6001 பேர் அரசு தொடர்பு துணை தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் கட்சியில் இணைந்தனர். இதற்கான கணினிமயமாக்கப்பட்ட ஆவணத்தை மாநில தலைவர் முருகனிடம் மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.…

Read More

கண்காட்சியில் சாதித்த மாணவர்கள்

சிவகாசி : கோயம்புத்துார் நேரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி சார்பில் இணைய வழி அறிவியல் காண்காட்சி போட்டிகள் நடந்தது. சிவகாசி நாயக்கர் மகமை பண்டு கம்மாவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் கார்த்தீஸ்வரன் அறிவியல் மாதிரி கண்டுபிடிப்பு போட்டியில் முதல் பரிசு , பிளஸ் 2 மாணவி வர்ஷாலட்சுமி , கட்டுரை போட்டியில் 3 ம் பரிசு , மாணவி சுரேதா மெஹந்தி போட்டியில் 2 ம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைவர் கோபால்சாமி, செயலர் சுந்தரராஜன், இணை செயலர்கள் தேவராஜன், சங்கர நாராயணன், இணை பொருளாளர் பார்த்தசாரதி, நிர்வாக அதிகாரி தர்மராஜ், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Read More

இருக்கன்குடி கோயில் காணிக்கை வசூல் ரூ .77லட்சம்

சாத்துார் : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ .77லட்சம் கிடைத்தது. இக்கோயிலில் மாதந்தோறும் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைப் பொருட்கள் கணக்கிடப்படுவது வழக்கம்.தை கடைசி வெள்ளியில் பெருந் திருவிழா நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கணேசன், நகை சரிபார்ப்பு அலுவலர் சிவலிங்கம், கோவில் உதவி ஆணையர் கருணாகரன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டது. ரூ. 77 .68 லட்சம், 195 கிராம் தங்கம் , 988 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக கிடைத்தது . கோயில் அலுவலர்கள், ஊழியர்கள், சாத்துார், துலுக்கப்பட்டி ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றத்தினர், ஐயப்பா சேவா சங்க உறுப்பினர்கள் காணிக்கை பொருட்களை கணக்கிட்டனர்.

Read More