கண்காட்சியில் சாதித்த மாணவர்கள்

சிவகாசி : கோயம்புத்துார் நேரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி சார்பில் இணைய வழி அறிவியல் காண்காட்சி போட்டிகள் நடந்தது.

சிவகாசி நாயக்கர் மகமை பண்டு கம்மாவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் கார்த்தீஸ்வரன் அறிவியல் மாதிரி கண்டுபிடிப்பு போட்டியில் முதல் பரிசு , பிளஸ் 2 மாணவி வர்ஷாலட்சுமி , கட்டுரை போட்டியில் 3 ம் பரிசு , மாணவி சுரேதா மெஹந்தி போட்டியில் 2 ம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைவர் கோபால்சாமி, செயலர் சுந்தரராஜன், இணை செயலர்கள் தேவராஜன், சங்கர நாராயணன், இணை பொருளாளர் பார்த்தசாரதி, நிர்வாக அதிகாரி தர்மராஜ், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related posts

Leave a Comment