களை இழக்கும் கட்டடங்கள்… பயன்பாடின்றி பாழ்

விருதுநர் மாவட்டத்தில் ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் சமுதாயகூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு குறைந்த கட்டணத்தில் உள்ளாட்சிகளால் பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.பெரும்பாலான இடங்களில் இவற்றை முறையாக பராமரிக்காமல் விட்டதால் வீணாகி வருகின்றன. சில இடங்களில் புதியதாக அமைத்தும் பயன்பாட்டிற்கு வராமல் பாழாகின்றன.இவைகளை சீரமைக்க உள்ளாட்சிகள் முன் வரவேண்டும்.

Read More

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பிரம்மோற்ஸவ விழா துவங்கியது

ராஜபாளையம், : ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மாசி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று காலை 6:30 மணிக்கு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க பால், தயிர், சந்தனம் என 11 வகை அபிஷேகங்களை தொடர்ந்து கொடியேற்றம் மற்றும் கொடி மரத்திற்கு தீபாராதனை நடந்தது.கோயில் பரம்பரை அறங்காவலரான ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர் வெங்கட்ராமராஜா குடும்பத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10 நாள் நடக்கும் இவ்விழாவில் தினமும் சுவாமியுடன் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிப். 23ல் திருக்கல்யாணம், 24ல் தெப்பத்திருவிழா, 25ல் தேரோட்டம் நடைபெறுகிறது.

Read More

பள்ளி ,கல்லுாரி செய்திகள்

மருத்துவ பரிசோதனை முகாம்சிவகாசி : எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் உடற்கல்வி துறை மற்றும் ஹெல்த் கிளப் சார்பில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி துவக்கி வைத்தார். டாக்டர் ராஜலட்சுமி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். கொரோனா பற்றிய விழிப்புணர்வு , ரத்த சோகையை நீக்குதல், சரும பாதுகாப்பு மற்றும் மாதவிடாய் குறித்து விளக்கப்பட்டது. உடற்கல்வி இயக்குநர் விஜயகுமாரி, உதவி உடற்கல்வி இயக்குநர் சசிபிரியா ஏற்பாடுகளை செய்திருந்தார்.சாலை பாதுகாப்பு விழாசிவகாசி: அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி இணைய சேவை மையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். இணைய சேவை மையம் தலைவர் ஜெயராம் துவக்கி வைத்தார். டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வாகனங்களின் முகப்பு விளக்குகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.…

Read More

ரூ.70க்கு மருத்துவ காப்பீடு அட்டை… கிராமங்களில் கூவி கூவி வசூல் வேட்டை

ஸ்ரீவில்லிபுத்துார் : அரசின் மருத்துவகாப்பீடு திட்டத்தின் அடையாள அட்டை எடுத்து கொடுத்து ரூ.70 வசூலிக்கும் பணியில் சில தனிநபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது உண்மைத்தன்மை கொண்டதா என்பதை அறியாமல் பொதுமக்களும் வாங்கி செல்கின்றனர்.மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ரூ.5 லட்சம் வரை மருத்துவகாப்பீடு பெறும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதுஇதில் ஏற்கனவே கலைஞர் காப்பீடு திட்டம், முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றவர்களும் அப்படியே முழுஅளவில் இத்திட்டத்தில் இணைக்கபட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் தாங்களும் இருக்கிறமோ என்பதை பழைய ரேஷன்கார்டு, புதிய ஸ்மார்ட் கார்டு நம்பரை கொண்டு அந்தந்த நகர அரசு மருத்துவமனைகளில் இயங்கும் காப்பீடு திட்ட அலுவலகத்தில் உறுதிபடுத்தி கொள்ளலாம். இல்லாதவர்கள் அந்த அலுவலகத்தில் தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வி.ஏ.ஓ.,விடம் சான்று பெற்று கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் காப்பீடு திட்ட…

Read More

34 கி.மீ., நீளத்தில் ‘பசுமைச்சாலை’ … ரூ.150 கோடியில் அமைகிறது சிவகாசி ‛ரிங்ரோடு’

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் பொருட்டு 13.5 கி.மீ., நீளத்தில் ரூ.150 கோடி மதிப்பில் சிவகாசி ரிங்ரோடு’ எனும் பசுமைச்சாலை விரைவில் அமைகிறது. இதற்காக நில ஆர்ஜிதம் செய்ய மாவட்ட வருவாய் துறையிடம் ரூ.20 கோடியை மாநில நெடுஞ்சாலைத்துறை வழங்கி உள்ளது. இதையடுத்து நில ஆர்ஜிதப்பணியை அத்துறை துவங்கி உள்ளது.சிவகாசி – ஸ்ரீவில்லிபுத்துார் மெயின் ரோடு நகர் வழியாக செல்கிறது. குறுகிய, நெருக்கடி மிகுந்த இவ்வழித்தடத்தில் 6 கி.மீ., நீளத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து ஊர்ந்து செல்வதால் 30 முதல் 40 நிமிடங்கள் கால விரையம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க சிவகாசி ரிங்ரோடு அமைவது மட்டுமே தீர்வாகும் என அனைத்து தரப்பினரும் அரசிடம் வலியுறுத்தினர். இக்கோரிக்கையை ஏற்று அப்போதைய முதல்வர்…

Read More