பள்ளி ,கல்லுாரி செய்திகள்

மருத்துவ பரிசோதனை முகாம்சிவகாசி : எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் உடற்கல்வி துறை மற்றும் ஹெல்த் கிளப் சார்பில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி துவக்கி வைத்தார். டாக்டர் ராஜலட்சுமி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். கொரோனா பற்றிய விழிப்புணர்வு , ரத்த சோகையை நீக்குதல், சரும பாதுகாப்பு மற்றும் மாதவிடாய் குறித்து விளக்கப்பட்டது. உடற்கல்வி இயக்குநர் விஜயகுமாரி, உதவி உடற்கல்வி இயக்குநர் சசிபிரியா ஏற்பாடுகளை செய்திருந்தார்.சாலை பாதுகாப்பு விழாசிவகாசி: அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி இணைய சேவை மையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். இணைய சேவை மையம் தலைவர் ஜெயராம் துவக்கி வைத்தார். டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வாகனங்களின் முகப்பு விளக்குகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மாணவர்கள் மவுன மொழி நாடகம் நடத்தினர். இணைய சேவை மையம் ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.இணைய வழியில் சொற்பொழிவுசிவகாசி : எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி கணிதம் மற்றும் கணினி துறை சார்பில் கல்லுாரி ஆசிரியர்களுக்கு இணைய வழியில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி தலைமை வகித்தார். கணித துறை தலைவர் ரோஸ்லின் ஞானகுமாரி வரவேற்றார். இணை பேராசிரியை லீனாபெனிட்டா துவக்க உரையாற்றினார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரி முன்னாள் முதல்வர் ஜெயகர் செல்லராஜ் பேசினார். கணினி துறை உதவி பேராசிரியர் தேவி ஆரோக்கியவனிதா நன்றி கூறினார். உதவி பேராசிரியர்கள் பெத்தனாட்சி, மைதீன் பிபி, பவித்ரா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.சாலை பாதுகாப்பு ஊர்வலம்சிவகாசி: பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி நாட்டு நலப் பணி திட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குநர் விக்னேஷ்வரி முன்னிலை வகித்தார். மாணவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஏ.டி.எஸ்.பி., மாரிராஜன் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி கலந்து கொண்டனர். கல்லுாரி நிர்வாகம், நாட்டு நலப் பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் துர்க்கை ஈஸ்வரன், , பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related posts

Leave a Comment