மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பிரம்மோற்ஸவ விழா துவங்கியது

ராஜபாளையம், : ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மாசி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையொட்டி நேற்று காலை 6:30 மணிக்கு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க பால், தயிர், சந்தனம் என 11 வகை அபிஷேகங்களை தொடர்ந்து கொடியேற்றம் மற்றும் கொடி மரத்திற்கு தீபாராதனை நடந்தது.கோயில் பரம்பரை அறங்காவலரான ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர் வெங்கட்ராமராஜா குடும்பத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10 நாள் நடக்கும் இவ்விழாவில் தினமும் சுவாமியுடன் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிப். 23ல் திருக்கல்யாணம், 24ல் தெப்பத்திருவிழா, 25ல் தேரோட்டம் நடைபெறுகிறது.

Related posts

Leave a Comment