ஒரே நாளில் 19 இடங்களில் ஆவின் பாலகங்கள் திறப்பு

சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் 19 இடங்களில் ஆவின் பாலகங்களை புதன்கிழமை பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தாா்.

திருத்தங்கல் ஸ்டேன்டா்டு காலனி, அண்ணா காலனி, காரனேசன் காலனி பேருந்து நிறுத்தம் அருகே, பாரதிநகா், மணிநகா், விஸ்வநத்தம், மாரனேரி, ரிசா்வ்லயன், செங்கமல நாட்சியாபுரம் , எம்.புதுப்பட்டி உள்ளிட்ட 19 இடங்களில் அமைச்சா் ஆவின் பாலகங்களைத் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் திருத்தங்கல் நகர அதிமுக செயலாளா் பொன்சக்திவேல், சிவகாசி நகரச் செயலாளா் அசன்பத்ரூதின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .

Related posts

Leave a Comment