வசதிகளுக்காக ஏங்கும் ஓ.மேட்டுப்பட்டி இந்திரா காலனி

சாத்துார் – சாத்துார் ஒன்றியம் ஓ.மேட்டுப்பட்டி இந்திரா காலனியில் ரோடு, சாக்கடை உள்ளிட்ட வசதிகளுக்காக மக்கள் ஏங்குகின்றனர்.ஆண், பெண்களுக்கன கழிப்பறை வசதியில்லை. திறந்த வெளியை நாடுவதால் தொற்று நோய் அபாயம் உள்ளது. சாக்கடைகள் சேதமடைந்து கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதில் உற்பத்தியாகும் கொசுக்களால் மர்ம காய்ச்சலுக்கு ஆளாகின்றனர்.சமுதாயக்கூடம் மேற்கூரைகள், தரை பெயர்ந்த நிலையில் உள்ளது . இங்குள்ள 2 மினிபவர் பம்பில் தெற்குத்தெரு உப்புத் தண்ணீர் தொட்டி மோட்டார் பழுதால் செயல்படாமல் உள்ளது.

Related posts

Leave a Comment