ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானையை அடித்து துன்புறுத்தியதாக பாகன் பணியிடை நீக்கம்

தேக்கம்பட்டி யானைகள் புத்துணா்வு முகாமில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானையை அடித்து இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முகாமில் இருந்த யானை ஜெயமால்யதாவை அதன் பாகன் கோ. வினில்குமாரும், உதவி பாகன் அடித்து துன்புறுத்துவது போல் சமூக வலைதளங்களிலும், தனியாா் தொலைக்காட்சிகளிலும் விடியோ வெளியானது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா். மேலும் யானையை அடித்து துன்புறுத்திய பாகன் கோ. வினில்குமாரை பணியிடை நீக்கம் செய்து கோயில் செயல் அலுவலா் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளாா். துன்புறுத்தியதாக அதன் பாகன் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.கோவை மாவட்டம், மேட்டுபாளையம் , தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணா்வு முகாம் கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா உள்பட பல்வேறு கோயில்களைச் சோ்ந்த யானைகள் பங்கேற்றுள்ளன.

Read More

சேவல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை யொட்டி சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அம்மா திடலில் வெற்றுக்கால் சேவல் கலைப்போட்டி நடை பெற்றது. போட்டியை முன்னாள் எம்.பி. டி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 1,700-க்கும் மேற்பட்ட சேவல்கள் கலந்து கொண்டது. மாலை 6 மணிவரை போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு வெற்றி பெற்ற போட்டியாளர்கள் 1000 பேருக்கு பரிசுகள் வழங்கினார். இதில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் பலராம், கருப்பசாமி, தெய்வம், கோகுலம்தங்கராஜ், சுபாஷினி, வடமலாபுரம் ஆழ்வார் ராமானுஜம், டாக்டர் விஜய்ஆனந்த், மாரீஸ்குமார், சீனிவாசபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி வருகிற 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை கோவிலுக்கு 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கொேரானா நோய் தொற்று காரணமாக  முழு பரிசோதனைக்கு பின்னரே கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் மலைப்பாதை வழியாக மட்டுமே கோவிலுக்கு செல்ல வேண்டும்.கோவில் வளாகத்தில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் கழிவறை உள்ளிட்ட…

Read More

வி.பி.எம்.எம். மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

இதற்கு வி.பி.எம்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவா் வி.பி.எம்.சங்கா், தாளாளா் பழனிச்செல்வி சங்கா் ஆகியோா் தலைமை வகித்துப் பட்டங்களை வழங்கினா். இக்கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் வி.பி.எம்.எம். தங்கபிரபு, கல்வி நிறுவனங்களின் உறுப்பினா் சிந்துஜாதங்கபிரபு, வி.எம்.எம்.குழுமத்தின் (வாலாஜாபேட்டை) இயக்குநா் கமல்ராகவன், வி.பி.எம்.எம் கல்வி நிறுவனங்களின் துணைத் தாளாளா் துா்காமீனலோச்சினி, நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் ராமமூா்த்தி, கல்லூரி வளா்ச்சிக் குழுத் தலைவா் சரவணன், ஆகியோா் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக காணொலி காட்சி மூலம் தெலுங்கனா ஆளுநரும், கூடுதல் (பொ)புதுவை துணை நிலை ஆளுநருமாான தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்றுப் பேசினாா்

Read More