ரோட்டில் ஓடுது குடிநீர்… மனம் குமுறும் மக்கள்

விருதுநகர் மாவட்டத்தில் குடிநீருக்கான ஆதாரங்கள் ஏராளம் இருந்தும் அதை முறையாக பயன்படுத்தாமல் விட்டதால் இன்று எங்கும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தாமிரபரணி, வைகை ஆற்றிலிருந்து குடிநீர் வந்தும் மாவட்டம் குடி நீர் பற்றாக்குறையில் தத்தளிக்கிறது.இதற்கான குழாய்களில் தினமும் உடைப்பு ஏற்பட அதை சீரமைப்பதில் ஏற்படும் தாமதத்தால் குடிநீரானது ஆங்காங்கு ரோட்டோரம் உள்ள பள்ளங்களில் குளம்போல் தேங்குகிறது.இது போன்ற அஜாக்கிரதை யால் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்களும் தள்ளப்பட்டுள்ளனர்.

Read More

வீணாகிறதே! கழிவுகளின் சங்கமமான கண்மாய்கள்; பன்றி வளர்க்கும் மையமான அவலம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாததால் நீர் நிலைகள், கண்மாய்களில் கழிவு நீர் சங்கமித்து வீணாகி வருகிறது. பன்றிகள் வளர்க்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளதால் தொற்று நோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரம்) பராமரிப்பில் 230 கண்மாய்கள், ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் 712 கண்மாய்கள், மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகள் பராமரிப்பில் ஊரணிகள், குளங்கள் உள்ளன. இவை கிராமங்களில் மழை நீர் சேமிப்பு மையமாக உள்ளது. இவற்றில் மழை காலங்களில் மழை நீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படுத்தப்படுகிறது. தற்போது பல கண்மாய்கள் ,வரத்து கால்வாய்கள் பராமரிப்பு இல்லாததால் துார்ந்து விட்டன.சமீபத்தில் பெய்த மழையால் 60 சதவீத கண்மாய்கள் நிரம்பின. தேவையான மழை பெய்தும் 40 சதவீதம் கண்மாய்கள், நீர் நிலைகளில் நிரம்பவில்லை. பெரும்பாலான கண்மாய்களில் கழிவுகள் தேங்குவதால் பன்றிகள் கேந்திரமாக மாறி…

Read More

ஸ்ரீவி.,வழியாக குருவாயூர் எக்ஸ்பிரஸ்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக சென்னை -குருவாயூர் எக்ஸ்பிரஸ் நேற்று முதல் பயணித்தது. விருதுநகரில் இருந்து திருநெல்வேலி வரை மின் பாதை பணிகள் நடப்பதால் சில ரயில்கள் வழித்தட மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதன்படி சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம் வழியாக குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முதல் விருதுநகரிலிருந்து சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வழியாக மாற்றி விடப்பட்டது.இதன்படி நேற்று மாலை 6 :10 மணிக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக கடந்து சென்றது.

Read More

மருத்துவமனை கட்டடம் திறப்பு

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் 250 படுக்கை வசதிகளுடன் ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை மைய கட்டடத்தை சென்னையில் இருந்தபடி முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.கலெக்டர் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள சுப்ரமணியன், ஊரக பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குனர் மனோகரன் இனிப்பு வழங்கினர்.பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சங்கரலிங்கம், செயற்பொறியாளர் நாகவேல், உதவி பொறியாளர்கள் சீதாராமன், சந்திரபோஸ் உடனிருந்தனர்.

Read More