மருத்துவமனை கட்டடம் திறப்பு

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் 250 படுக்கை வசதிகளுடன் ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை மைய கட்டடத்தை சென்னையில் இருந்தபடி முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.கலெக்டர் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள சுப்ரமணியன், ஊரக பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குனர் மனோகரன் இனிப்பு வழங்கினர்.பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சங்கரலிங்கம், செயற்பொறியாளர் நாகவேல், உதவி பொறியாளர்கள் சீதாராமன், சந்திரபோஸ் உடனிருந்தனர்.

Related posts

Leave a Comment