ரோட்டில் ஓடுது குடிநீர்… மனம் குமுறும் மக்கள்

விருதுநகர் மாவட்டத்தில் குடிநீருக்கான ஆதாரங்கள் ஏராளம் இருந்தும் அதை முறையாக பயன்படுத்தாமல் விட்டதால் இன்று எங்கும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தாமிரபரணி, வைகை ஆற்றிலிருந்து குடிநீர் வந்தும் மாவட்டம் குடி நீர் பற்றாக்குறையில் தத்தளிக்கிறது.இதற்கான குழாய்களில் தினமும் உடைப்பு ஏற்பட அதை சீரமைப்பதில் ஏற்படும் தாமதத்தால் குடிநீரானது ஆங்காங்கு ரோட்டோரம் உள்ள பள்ளங்களில் குளம்போல் தேங்குகிறது.இது போன்ற அஜாக்கிரதை யால் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்களும் தள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment