ஸ்ரீவி.,வழியாக குருவாயூர் எக்ஸ்பிரஸ்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக சென்னை -குருவாயூர் எக்ஸ்பிரஸ் நேற்று முதல் பயணித்தது.

விருதுநகரில் இருந்து திருநெல்வேலி வரை மின் பாதை பணிகள் நடப்பதால் சில ரயில்கள் வழித்தட மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதன்படி சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம் வழியாக குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முதல் விருதுநகரிலிருந்து சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வழியாக மாற்றி விடப்பட்டது.இதன்படி நேற்று மாலை 6 :10 மணிக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக கடந்து சென்றது.

Related posts

Leave a Comment