விருதுநகர்: விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு என்ற தலைப்பில் தேர்தல் பிரசார டூவீலர் ஊர்வலம் பழைய பஸ் ஸ்டாண்ட் முன் துவங்கியது. மாவட்ட செயலாளர்களான எம்.எல்.ஏ.,க்கள் சாத்துார் ராமச்சந்திரன் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தனர்.அண்ணாதுரை சிலை, மாரியம்மன் கோயில், மெயின் பஜார், நகராட்சி அலுவலகம் ரோடு, எம்.ஜி.ஆர்., சிலை, ரோசல்பட்டி, அகமது நகர், போக்குவரத்து கழக பணி மனை ரோடு, கந்தபுரம் தெரு வழியாக சென்று தேசபந்து மைதானத்தில் நிறைவு பெற்றது.எம்.எல்.ஏ., சீனிவாசன், நிர்வாகிகள் மதியழகன், தனபாலன், கார்த்திகேயன், திருமாறன், குமார், கோதண்டராமன், காசிராஜன் பங்கேற்றனர்.ராஜபாளையம்: தென்காசி எம்.பி., தனுஷ்குமார், எம்.எல்.ஏ., தங்கப்பாண்டியன் தலைமையில் நடந்த ஊர்வலம் ராஜபாளையம் பச்சமடம் பகுதி தொடங்கி சம்மந்தபுரம், பழைய பஸ் ஸ்டாண்டு ஆவாரம்பட்டி வழியாக ஜவகர் மைதானத்தில் நிறைவடைந்தது.நகர…
Read MoreDay: February 27, 2021
பாலவநத்தம் நெடுஞ்சாலை தரம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
விருதுநகர்: விருதுநகரில் நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) குறித்து நெல்லை கண்காணிப்பு பொறியாளர் சாந்தி புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை திடீர் ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறார். சந்தேகத்துக்கு இடமான சாலையில் இயந்திரம் மூலம் 10 இஞ்ச் அகலம், அரை அடி ஆழத்துக்கு வட்ட வடிவில் தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே நெடுஞ்சாலைத்துறையின் தர நிர்ணய அளவில் தார், ஜல்லி கலவை உள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகிறார். மேலமடை – பாலவநத்தம் சாலையை இயந்திரம் மூலம் தோண்டி பார்த்து தரம் குறித்து ஆய்வு செய்தார். இதன் மாதிரியை நெடுஞ்சாலைத்துறையின் தர நிர்ணய பரிசோதனை கூடத்துக்கு அனுப்பவும் உத்தரவிட்டார். விருதுநகர் கோட்ட பொறியாளர் முருகேசன், உதவி கோட்ட பொறியாளர் தங்க அழகர் ராஜன், உதவி பொறியாளர் ரம்யா உடனிருந்தனர்.
Read Moreஇரண்டாம் நாளாக தொடரும் ‘ஸ்டிரைக்’ : கொரோனா தொற்றிலும் நெரிசலில் பயணம்
விருதுநகர்: விருதுநகரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறத்த போராட்டத்தால் 47 சதவீதம் பஸ்கள் இயங்கவில்லை. பஸ் கிடைக்காமல் பயணிகள் கொரோனா தொற்றிலும் நெரிசலில் பயணிக்கும் நிலை தொடர்கிறது. தனியார் பஸ்கள், ஆட்டோ, வேன்களில் தொத்தி கொண்டு ஆபத்து பயணம் மேற்கொள்கின்றனர்.அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி இரண்டாவது நாளாக நேற்றும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. தொ.மு.ச., சி.ஜ.டி.யூ., உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க., தொழிற்சங்கத்தினர் ஈடுபடவில்லை. மாவட்டத்தில் 43 சதவீத பஸ்களே இயங்கி நிலையில்பஸ்கள் கிடைக்காமல் ம்ககள் பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப்புகளில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். தனியார் பஸ்கள், வேன், ஆட்டோக்களில் தொங்கிய படி ஆபத்து பயணம் மேற்கொண்டனர். கொரோனா தொற்று ரேநத்திலும் நெருக்கடி பயணத்தால் பயணிகள் பெரும் பாதிப்பை…
Read Moreவருவாய் ஊழியர்கள் உண்ணாவிரதம்
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் சூரியமூர்த்தி பேசியதாவது: அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் வருவாய் கிராம ஊழியர்களுக்கும் நாட்களை கணக்கிட்டு போனஸ் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு 20 லிருந்து 30 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், என்றார். பொருளாளர் சேகர் நன்றி கூறினார்.
Read Moreகல்லுாரியில் விளையாட்டு விடுதி திறப்பு
ராஜபாளையம்; ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரியில் விளையாட்டு மற்றும் பெண்கள் விடுதி திறப்பு விழா நடந்தது.ஏ.டி.ஜி.பி., ரவி திறந்து வைத்தார்.அவர் பேசியதாவது: பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளில் இருந்து மாணவிகள் வெளிவறுவதோடு நல்ல எண்ணங்களை மனதில் விதைத்து வாழ்க்கையில் முன்னேறவேண்டும், என்றார். கல்லுாரி முதல்வர் ஜெகந்நாத் வரவேற்றார். செயலர் விஜயராகவன் தலைமை வகித்தார். கல்லுாரி தலைவர் திருப்பதி ராஜா கலந்து கொண்டனர். உடற்கல்வி இயக்குனர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
Read Moreதேர்தல் அறிவிப்புக்கு முன் திறப்பு விழா
ராஜபாளையம்: தேர்தல் தேதி அறிவிப்பால் ராஜபாளையத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட உயர் கோபுர விளக்குகளை எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் அவசர கதியில் திறந்து வைத்தார்.ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டு, பொன்விழா மைதானம், தென்காசி ரோவு, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட 15 இடங்களில் தலா ரூ. 3 லட்சம் என ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக நேற்று அவசரமாக தி.மு.க., எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.
Read More2021-சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கிய திமுகவினரிடம் 02-03-2021 முதல் 06-03-2021 வரை நேர்காணல் நடத்துகிறார்”
2021-சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கிய திமுகவினரிடம் 02-03-2021 முதல் 06-03-2021 வரை நேர்காணல் நடத்துகிறார்”
Read More