பிரசாரத்தை முதலில் துவக்கிய நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர்

அருப்புக்கோட்டை : நாம் தமிழர் கட்சியின் அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர் உமா 28, பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அருப்புக்கோட்டை அருகே தொட்டியான்குளத்தை சேர்ந்த விவசாயி அடைக்கலம் மனைவி உமா. பி.ஏ., பட்டதாரி.தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தொகுதியில் உள்ள ஒவ்வொரு கல்லுாரிகளுக்கு சென்று காலை, மாலையில் மாணவர்களை சந்தித்து இலவச குடிநீர், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி தனக்கு ஓட்டளிக்கும்படி பிரசாரம் செய்து வருகிறார். புதிய வாக்காளர்கள், இளைஞர்களை குறிவைத்து உமா பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அருப்புக்கோட்டை தொகுதியில் முதலில் பிரசாரம் துவக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் அறிவிப்பு

தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி அலுவலர்கள்ராஜபாளையம் கல்யாணகுமார், மாவட்ட வழங்கல் ஸ்ரீதர், தாசில்தார், ராஜபாளையம், 94450 00661, அலுவலர், 94450 00353 ரெங்கநாதன், சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார், 94878 12123ஸ்ரீவில்லிபுத்துார் முருகன், கலால் உதவி சரவணன், தாசில்தார், ஸ்ரீவில்லிபுத்துார், ஆணையர், 94450 74605 94450 00660, அன்னம்மாள், தாசில்தார், வத்திராயிருப்பு, 97881 58884.சாத்துார் புஷ்பா, ஆர்.டி.ஓ., வெங்கடேஷ், தாசில்தார், சாத்துார், 94450 00662, சாத்துார், 99442 42782 ராஜா ஹூசைன், தாசில்தார் வெம்பக்கோட்டை 98429 71364சிவகாசி எஸ்.தினேஷ்குமார், சப் கலெக்டர், ராமசுப்பிரமணியன், தாசில்தார், சிவகாசி, சிவகாசி, 94450 00474 94450 00663, விஜயலட்சுமி, சமுகபாதுகாப்பு திட்ட தாசில்தார், சிவகாசி, 97506 06637விருதுநகர் சந்தானலட்சுமி, மாவட்ட சிவஜோதி, தாசில்தார், விருதுநகர், 94450 00667, பிற்படுத்தப்பட்டோர், ரமணன், சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார், சிறுபான்மையினர் அலுவலர், விருதுநகர்,…

Read More

அம்மன் சிலை தோளில் கிளி; பக்தர்கள் பரவசம்

சிவகாசி : சிவகாசி அருகே மீனாட்சி அம்மன் சிலையின் தோளில் அமர்ந்த கிளியால் பக்தர்கள் பரவசமடைந்தனர். திருத்தங்கல் கருநெல்லிநாதர் மீனாட்சி சமேதர் கோயில் உள்ளது. கோயிலின் உள்ளே சன்னதியில் மீனாட்சி அம்மன் சிலை உள்ளது. நேற்று மாலை 6:00 மணிக்கு மீனாட்சி அம்மன் சிலையின் தோளில் நீண்ட நேரம் கிளி அமர்ந்திருந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மன் தோளில் கிளி அமர்ந்திருப்பது போல் இங்கு உயிருள்ள கிளியே அம்மன் தோளில் அமர்ந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.

Read More

பி.ஆர்.ஓ., கமிஷனர் இடமாற்றம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் கருப்பண ராஜவேல் தென்காசிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திருவள்ளூர் உதவி செய்தி தொடர்பு அலுவலர் வெற்றிவேந்தன் மாவட்ட செய்தி தொடர்பு அலுவலராக பதவி உயர்வு பெற்று விருதுநகருக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி சிறப்பு நிலை நகராட்சி கமிஷனராக பதவி உயர்வு பெற்று சிவகாசி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.விருதுநகர் நகராட்சி கமிஷனராக மேலாளர் ஜெகதீஸ்வரி கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.

Read More

பி.ஆர்.ஓ., கமிஷனர் இடமாற்றம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் கருப்பண ராஜவேல் தென்காசிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திருவள்ளூர் உதவி செய்தி தொடர்பு அலுவலர் வெற்றிவேந்தன் மாவட்ட செய்தி தொடர்பு அலுவலராக பதவி உயர்வு பெற்று விருதுநகருக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி சிறப்பு நிலை நகராட்சி கமிஷனராக பதவி உயர்வு பெற்று சிவகாசி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.விருதுநகர் நகராட்சி கமிஷனராக மேலாளர் ஜெகதீஸ்வரி கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.

Read More

நேர்முக தேர்வு ஒத்திவைப்பு

விருதுநகர் : மாவட்ட நேருயுவகேந்திரா, இளையோர் அலுவலர் ஞானச்சந்திரன் கூறியதாவது: மத்திய இளையோர் நலன், விளையாட்டு அமைச்சகம் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று நடக்க இருந்த தேசிய இளையோர் தொண்டர்களுக்கான நேர்முக தேர்வு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

Read More

சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள்

சாத்துார் : விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் சாத்துார் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலையில் மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் இணைந்தனர். ராஜபாளையம் ஒன்றியம் மேலராஜகுலராமன் ஊராட்சி தலைவர் விவேகானந்தன் தலைமையில் மாற்று கட்சியினர் 800க்கும் மேற்பட்டோர் தி.மு.க.,வில் இணையும் விழா சாத்துாரில் நடந்தது.சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது: விவசாய கடன், நகை கடன் தள்ளுபடி என அறிவித்து விட்டார்கள். கைமாத்தா வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்கிறோம்னு மட்டும் தான் அறிவிக்கவில்லை. இதை எல்லாம் செய்ய போவது தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தான். அவர்கள் வாங்கிய கடனையும் ஸ்டாலின் தான் அடைக்கப்போகிறார். உங்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள், என்றார்.நிர்வாகி கோசுகுண்டு சீனிவாசன், சாத்துார் நகர செயலாளர் குருசாமி, கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் கடற்கரைராஜ், முருகேசன், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சிங்கராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவண முருகன்,…

Read More