அம்மன் சிலை தோளில் கிளி; பக்தர்கள் பரவசம்

சிவகாசி : சிவகாசி அருகே மீனாட்சி அம்மன் சிலையின் தோளில் அமர்ந்த கிளியால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.

திருத்தங்கல் கருநெல்லிநாதர் மீனாட்சி சமேதர் கோயில் உள்ளது. கோயிலின் உள்ளே சன்னதியில் மீனாட்சி அம்மன் சிலை உள்ளது. நேற்று மாலை 6:00 மணிக்கு மீனாட்சி அம்மன் சிலையின் தோளில் நீண்ட நேரம் கிளி அமர்ந்திருந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மன் தோளில் கிளி அமர்ந்திருப்பது போல் இங்கு உயிருள்ள கிளியே அம்மன் தோளில் அமர்ந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.

Related posts

Leave a Comment